ஈசூனில் திடீரென சாய்ந்து விழுந்த மரம்

ஈசூனில் திடீரென சாய்ந்து விழுந்த மரம்

1 mins read
d71888c4-f9da-443d-9b31-643fe7c3a8a2
-

ஈசூனில் மணிக்கணக்காக பெய்த மத்தியில் இன்று பெரும் மரம் ஒன்று சாய்ந்து விழுந்தது. இந்தச் சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை. பொது பொருட்களுக்கு எந்தச் சேதமும் ஏற்படவில்லை என்று நீ சூன் நகர மன்றம் தெரிவித்தது.

புளோக் 645 ஈசூனில் ஸ்திரீட் 61ல் அந்த மரம் காலை 8.10 மணிக்கு விழுந்து போக்குவரத்தை மறித்தது.

விழுந்த மரத்தை அப்புறப்படுத்தவும் சம்பவ இடத்திலுள்ள வாகன போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் நகர மன்றம் வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தது. இந்தப் பணிகளை விரைவில் செய்ததற்காக நீ சூன் குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் இப்ராகிம், நகர மன்றத்திற்குப் பாராட்டு தெரிவித்தார்.