கார் மீது உமிழ்ந்த சைக்கிளோட்டி

கார் மீது உமிழ்ந்த சைக்கிளோட்டி

1 mins read
ff44f080-162b-41c5-9d72-6345b54f9822
-

கார் ஒன்றின் மீது மோட்டார் சைக்கிளோட்டி உமிழ்ந்த சம்பவத்தைப் போலிசார் விசாரித்து வருகின்றனர். கடந்த வியாழக்கிழமையன்று இந்தச் சம்பவம் காருக்குள் இருந்த கேமராவில் பதிவானது.

ரிவர் வேலி ரோட்டுக்கும் கிம் செங் ரோட்டுக்கும் இடையிலான சாலை சந்திப்பில் காலை 9.10 மணிக்கு நடந்த சம்பவத்தைக் காருக்குள் இருந்த கேமரா பதிவு செய்தது. அந்தக் காரின் உரிமையாளரான கெல்வின் என்பவர் ஸ்டாம் தளத்திற்கு அனுப்பினார்.

" பாதசாரிகளுக்கான நடைபாதைக்குள் எங்கள் கார் சிறிது புகுந்துவிட்டதால் அந்த ஆடவர் கோபமடைந்தார். இருந்தாலும் அப்படி அவர் நடந்துகொண்டது தவறு. தற்போதைய கொவிட்-19 சூழலில் இவ்வாறு உமிழ்வது ஆபத்தானதும்கூட" என்று அவர் கூறினார்.

கெல்வின் அதே நாளன்று போலிசாரிடம் புகார் செய்தார்.