தொடக்கப்பள்ளி மாணவர் பதிவு 2ஏ(2) நாளை தொடக்கம்

தொடக்கப் பள்ளி 1ஆம் வகுப்பு மாண வர் சேர்க் கையின் இரண்டாம் கட்டத்தி ன்போது ஆறு தொடக்கப் பள்ளிகளில் அனைத்து இடங் களும் எடுத்துக் கொள்ளப்பட்டுவிட்டன. அடுத்த கட்ட பதிவு 2ஏ(2) நாளை காலை 9 மணிக்குத் தொடங்கி நாளை மறுநாள் மாலை 4.30 மணிக்கு முடிவடைகிறது.

அய் தோங் பள்ளி, கத்தோலிக்க ஹை தொடக்கப்பள்ளி, சிஎச்ஐஜே செயின்ட் நிக்கோலஸ் பெண்கள் பள்ளி (தொடக்கப்பள்ளி), நன்யாங் தொடக்கப்பள்ளி, பெய் ஹுவா பிரஸ்பித்திரியன் ரியன் தொடக்கப்பள்ளி, ரோசைத் பள்ளி ஆகியவை அந்த ஆறு பள்ளிகள் என்று கல்வி அமைச்சின் இணையத்தளம் தெரிவிக்கிறது.
அந்த ஆறு பள்ளிகளில் கட்டம் 2பி மற்றும் 2சி ஆகியவற்றின் மூலமாக மாணவர்களுக்கு இடம் கிடைக்கும்.

இந்தக் கட்டங்களில் ஒவ்வொன்றுக்கும் 20 இடங்களை ஒவ்வொரு தொடக்கப்பள்ளியும் ஒதுக்க வேண்டும் என்பதே இதற்கான காரணம்.

நாளை தொடங்கும் கட்டம் 2ஏ(2) என்பது, உடன்பிறந்தோர் அல்லது பெற்றோர் பழைய மாணவர்களாக இருக்கக்கூடிய பள்ளி களில், பெற்றோர் ஊழியர்களாக இருக்கக்கூடிய பள்ளிகளில் அவர்களின் பிள்ளைகள் சேர்வ தற்கானது.
அல்லது தொடக்கப்பள்ளியில் செயல்படும் கல்வி அமைச்சின் பாலர்பள்ளியில் இப்போது படிக்கும் பிள்ளைகளுக்கும் அந்தக் கட்டத்தில் இடம் ஒதுக்கப்படும். அந்தக் கட்டத்தில் கிடைக்கும் இடங்களைவிட அதிகமாக விண்ணப்பம் வந்தால் சில பள்ளிகள் குலுக்கல்முறை மூலம் மாணவர்களுக்கு இடங்களை ஒதுக்கக்கூடும்.
இந்த ஆண்டின் தொடக்கப்பள்ளி முதல் வகுப்பு பதிவு முற்றிலும் இணையம் வழி நடக்கிறது. அது அக்டோபர் வரை நீடிக்கும்.

மொத்தம் ஏழு கட்டங்களை அது கொண்டிருக்கிறது. அடுத்த ஒரு சில கட்டங்களுக்கான பதிவு படிவங்களை கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் பெறலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!