புதிதாக 60 பேருக்கு கொவிட்-19

புதிதாக 60 பேருக்கு கொவிட்-19

1 mins read
b2cbbd29-ce00-4594-b89e-a5b9ffab462e
-

சிங்கப்பூரில் புதிதாக 60 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனுடன் சிங்கப்பூரின் மொத்த கிருமித்தொற்று எண்ணிக்கை 62, 804க்கு உயர்ந்துள்ளது.

புதிய கிருமித்தொற்றுகளில் 56, சமூக அளவில் ஏற்பட்டுள்ளன. இவற்றில் 41 கிருமித்தொற்றுகள், ஆக வேகமாக வளர்ந்துவரும் கேடிவி குழுமத்தில் பதிவாகியுள்ளன.

எஞ்சியுள்ள நான்கு பேர் வெளிநாடுகளில் கிருமித்தொற்றி இங்கு வந்தவர்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.

சமூகப் பரவல்களில் முன்னைய சம்பவங்களுடன் தொடர்புடைய 17 பேர், தனிமையில் இருந்தவர்கள். முன்னைய சம்பவங்களுடன் தொடர்புடைய 33 பேர் கண்டுபிடிக்கப்பட்டனர். ஆறு சம்பவங்களுக்கு தொடர்புகள் அறியப்படவில்லை.