இந்தோனீசியா: ஒரே நாளில் 54,517 பேருக்கு கொரோனா தொற்று

இந்தோனீசியா: ஒரே நாளில் 54,517 பேருக்கு கொரோனா தொற்று

2 mins read

இந்தோனீசியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று மட்டும் 54,517 பேர் கொவிட்-19 தொற்றுக்கு ஆளானார்கள். 24 மணி நேரத்தில் 991 பேர் மரணமடைந்துவிட்டார்கள்.

தென் கிழக்கு ஆசி­யா­வில் கொவிட்-19 தொற்­றும் மர­ண­மும் இந்­தோ­னீ­சி­யா­வில்­தான் ஆக அதிக­மாக இருக்­கிறது. அங்கு இது­வரை­ கொரோனா தொற்­றுக்கு ஆளா­ன­வர்­க­ளின் மொத்த எண்­ணிக்கை 2.67 மில்­லி­யனை கடந்து­விட்­டது. மொத்­தம் 69,210 பேர் மர­ண­ம­டைந்­துவிட்­ட­னர்.

இந்­தோ­னீ­சி­யா­வில் 17,000க்கும் அதிகமான தீவு­களில் 34 மாநி­லங்­கள் இருக்­கின்­றன. அவற்­றில் 500க்கும் மேற்­பட்ட நக­ரங்­களும் நிர்­வா­கப் பகு­தி­களும் உள்­ளன.

பல மாநி­லங்­க­ளுக்­கும் நக­ரங்­களுக்­கும் நிர்­வா­கப் பகு­தி­க­ளுக்கும் கொவிட்-19 தொற்று பெரும் சவாலாக உரு­வெ­டுத்துள்ளது.

அந்த நாட்­டின் பல வட்­டாரங்­களும் கிரு­மித்­தொற்­றைக் கட்டுக்குள் கொண்டு வர முடி­யுமா அல்லது முடி­யா­மல் போய்­வி­டுமோ என்ற கவலை நில­வு­வ­தாக அந்த நாட்­டின் சுகா­தார அமைச்­சர் தெரி­வித்து இருக்­கி­றார்.

கடந்த 10 நாட்­களில் சாதனை அள­வுக்கு ஒவ்­வொரு நாளும் புதி­தாக கிரு­மித்­தொற்­றால் மக்­கள் பாதிக்­கப்­ப­டு­கி­றார்­கள். பல கட்­டுப்­பாட்டு நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்டு வந்தபோதி­லும் செவ்­வாய்க்­கி­ழமை மட்­டும் புதி­தாக 47,899 பேர் தொற்­றுக்கு ஆளா­னார்­கள்.

மக்­கள் நெருக்­க­மாக வசிக்­கும் ஜாவா தீவுக்கு வெளியே 11 பகுதி­களில் டெல்டா கிரு­மித்­தொற்று ஏற்பட்டு இருக்­கிறது என்று சுகா­தார அமைச்­சர் புடி குனாடி சாடி­கின் தெரி­வித்­தார்.

இத­னி­டையே, இந்­தோ­னீ­சி­யா­வின் பல வட்­டா­ரங்­களும் எளி­தில் கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­கக்­கூ­டிய நிலை­யில் இருப்­ப­தாக இஸ்­மன் முக்­தார் என்ற தொற்று நோயி­யல் வல்­லு­நர் எச்­ச­ரித்­தார்.

சுகா­தார வச­தி­களும் வளங்­களும் அவ­ச­ர­மா­கத் தேவைப்­ப­டு­வதா­கக் குறிப்­பிட்ட அவர், தொற்றைக் கட்­டுப்­ப­டுத்து­வ­து­தான் மிக முக்­கி­ய­மா­னது என்று வலி யுறுத்திக் கூறினார்.

ஜாவா மருத்­து­வ­மனைகள் அண்மைய வாரங்­க­ளாக திணறி வரு­கின்­றன.

இத­னி­டையே, இந்­தோ­னீ­சியா கொவிட்-19 தொற்றில் இந்­தி­யாவை விஞ்சிவிட்டதாகவும் புதிய ஆசிய தொற்று மையமாக அது உரு வெடுப்பதாகவும் தகவல்கள் தெரி வித்தன. ­

இவ்­வே­ளை­யில், அவ­ச­ர­கால நட­வ­டிக்­கை­களை மேற்­பார்­வை­யிடும் மூத்த அமைச்­ச­ரான லுஹாட் பின்­சார், உயிர்­வாயு வளங்­கள் நல்ல படி நிர்­வ­கிக்­கப்­பட்டு வரு­வ­தா­க­வும் சிங்­கப்­பூர், சீனா­வில் இருந்து 1,500க்கும் மேற்­பட்ட உயிர்­வாயு செறி­வூட்­டி­கள் விரை­வில் வந்து சேரும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­வதா­க­வும் தெரிவித்துள்ளார்.