மூத்தோரின் வசதிக்காக நடமாடும் தடுப்பூசி குழுக்கள்

மூத்தோரின் வசதிக்காக நடமாடும் தடுப்பூசி குழுக்கள்

2 mins read

முதி­ய­வர்­கள் தடுப்­பூ­சிப் போட்­டுக் கொள்­வ­தற்கு மேலும் வச­தி­யாக அதி­க­பட்­சம் 10 நட­மா­டும் குழுக்­கள் குடி­யி­ருப்­புப் பேட்­டை­க­ளுக்­குச் சென்று அப்­ப­ணி­யில் ஈடு­ப­ட­வுள்­ளன. சுகா­தார அமைச்சு நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் இத்­த­க­வ­லைத் தெரி­வித்­தது.

இன்­ன­மும் தடுப்­பூ­சிப் போட்­டுக்­கொள்­ளாத மூத்­தோ­ரைப் பாது­காக்க அர­சாங்­கம் கூடுதல் முயற்சி எடுத்து வரும் வேளை­யில் இந்­ந­ட­வ­டிக்கை அறி­விக்­கப்­பட்­டது.

"மூத்­தோர்­தான் மிகுந்த அபா­யத்­தில் உள்ள பிரி­வி­னர். கொவிட்-19 தொற்­றி­னால் உடல்­ந­லம் மிக மோச­மாக பாதிக்­கப்­ப­டக்­கூ­டிய ஆபத்­தில் அவர்­கள் உள்­ள­னர் என்­ப­தால் அவர்­கள் தடுப்­பூ­சி போட்­டுக்­கொள்­வது அவ­சி­யம்," என்று அமைச்சு குறிப்­பிட்­டது.

தடுப்­பூசி போட்­டுக் கொள்­ளா­விட்­டால் அவர்­க­ளால் கிரு­மியை எதிர்த்­துப் போராட முடி­யாது என்­றது சுகா­தார அமைச்சு.

இது­வரை, 70 வயது மற்­றும் அதற்­கும் மேற்­பட்ட வய­துள்­ள­வர்­களில் பத்­தில் ஏழு பேருக்கு குறைந்­தது ஒரு தடுப்­பூசி போடப்­பட்டு விட்­டது.

முதி­ய­வர்­கள் பலர் குடி­யி­ருக்­கும் வட்­டா­ரங்­களில் நட­மா­டும் தடுப்­பூ­சிக் குழுக்­கள் சில நாட்­ க­ளுக்கு அல்­லது ஒரு வாரத்­துக்­குச் செல்­லும். ஏற்­கெ­னவே தடுப்­பூசி நிலை­யங்­க­ளா­கச் செயல்­பட்டு வரும் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட சமூக மன்­றங்­கள், புளோக்­கு­க­ளின் கீழே உள்ள குடி­யி­ருப்­பா­ளர் நிலை­யங்­கள் போன்ற இடங்­களில் நட­மா­டும் குழுக்­கள் நிறுத்­தப்­படும்.

முதல் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­கள் இரண்­டா­வது தடுப்­பூ­சி­யைப் பெற வச­தி­யாக சில வாரங்­கள் கழித்து நட­மா­டும் குழுக்­கள் அதே இடத்­துக்­குத் திரும்­பும்.

முதல் நட­மா­டும் தடுப்­பூ­சிக் குழு ஏற்­கெ­னவே ஜூலை 7 முதல் 13ஆம் தேதி வரை ஆங்­கர்­வேல் சமூ­க­மன்­றத்­தில் நிறுத்­தப்­பட்­டி­ருந்­தது. காலாங், வாம்போ சமூக மன்­றங்­ க­ளுக்­குக் கடந்த 14ஆம் தேதி சென்ற தடுப்­பூ­சிக் குழுக்­கள் 21ஆம் தேதி வரை அங்­கி­ருக்­கும்.

அடுத்து சில வாரங்­களில் நட­மா­டும் தடுப்­பூ­சிக் குழுக்­கள் சாங்கி சீமெய் சமூக மன்­றம், பாய லேபார் கோவன் சமூக மன்­றம் உள்­ளிட்ட இடங்­க­ளுக்­குச் செல்­ல­வி­ருக்­கின்­றன.