சிங்கப்பூரில் நேற்று புதிதாக 42 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கேடிவி மற்றும் இரவுநேர கேளிக்கை விடுதிகளுடன் தொடர்புடைய 33 பேரும் அவர்களில் அடங்குவர். இவர்களையும் சேர்த்து கேடிவி தொற்றுக் குழுமத்தில் 87 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
உள்ளூரில் தொற்று உறுதியான 42 பேரில் 17 பேர் முன்னதாக கிருமி தொற்றியவர்களுடன் தொடர்புடையவர்கள்.
எஞ்சிய 20 பேருக்கு கண்காணிப்புப் பரிசோதனை மூலம் தொற்று உறுதியானது. தற்போது ஐவருக்கு எப்படி கிருமி தொற்றியது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.

