தடுப்பூசி போடாதவர்கள் தனியாக அல்லது இருவராக மட்டும் சாப்பிட முடியும்

தடுப்பூசி போடாதவர்கள் தனியாக அல்லது இருவராக மட்டும் சாப்பிட முடியும்

1 mins read
d251e40b-d3a8-485c-a600-eb75b9a2b2d8
-

தடுப்பூசிகளை முழுமையாகப் போட்டுக் கொண் டோருக் கு கிருமித் தொற்றுக்கு எதிரான நல்ல பாதுகாப்பு இருப்பதால் அவர்கள் தொடர்ந்து ஐந்து ஐந்து பேராகச் சாப்பிட செல்லலாம்.

சுகாதார அமைச்சு இதனை இன்று தெரிவித்துள்ளது.

கொவிட்-19 கிருமித்தொற்றிலிருந்து குணமானோரின் அபாயம் குறைவாக உள்ளது. ஐந்து பேர் வரை அவர்கள் வெளியே சாப்பிடலாம் என்று சுகாதார அமைச்சு கூறியது.

கிருமித்தொற்று எதிரான நல்ல பாதுகாப்பு தடுப்பூசிகளை முழுமையாக போட்டுக்கொண்டோருக்கு இருப்பதால் அவர்கள் தொடர்ந்து ஐந்து ஐந்து பேராக சாப்பிட செல்லலாம் என்றது சுகாதார அமைச்சு.

பைஸர்-பையோடெக்/ கொமிர்னாட்டி அல்லது மார்டெனா தடுப்பூசிகள் இரண்டையும் போட்டுக்கொண்ட ஒருவர் இரண்டு வாரங்களுக்குப் பிறகு தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக்கொண்டவராகக் கருதப்படுவார் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.

ஒரே வீட்டிலுள்ள அதே குடும்ப உறுப்பினர்கள், தடுப்பூசிகளைப் போடாத 12 வயதுக்கும் குறைவான பிள்ளைகளுடன் முன் சோதனை இன்றி வெளியிடங்களில் சாப்பிடலாம். அப்போதும் ஐந்து பேருக்கு மேல் ஒன்றாக அமர்ந்து சாப்பிட முடியாது என்றது சுகாதார அமைச்சு.

பன்னிரண்டு வயதுக்குக் குறைவான பிள்ளைகள் கொவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதற்கான தேவை இல்லை.