தடுப்பூசி போடாவிடில் இருவர் மட்டுமே சேர்ந்து உண்ணலாம்

நாளை மறுநாளில் இருந்து நடைமுறைக்கு வருகிறது

இது­வரை தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர்­கள் தனி­யாக அல்­லது இரு­வராகச் சேர்ந்து மட்­டுமே உணவகத்தில் உண்ண முடியும். இந்த நடை­முறை நாளை மறு­நாள் 19ஆம் தேதி திங்­கட்­கி­ழ­மை­யில் இருந்து அடுத்த மாதம் 8ஆம் தேதி­வரை நடப்­பில் இருக்­கும்.

அதே வேளை­யில், தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­கள் அதி­க­பட்­சம் ஐவர் அடங்­கிய குழு­வா­கச் சேர்ந்து உண்ண முடி­யும்.

இரு தடுப்­பூ­சி­க­ளை­யும் போட்­டுக்­கொண்­டோர், கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ரா­க­வும் அத­னால் பாதிக்­கப்­ப­டு­வதில் இருந்­தும் மேம்­பட்ட பாது­காப்­பைக் கொண்­டி­ருப்­பர் என்­ப­தும் அவர்­கள்­மூலம் மற்­ற­வர்­க­ளைக் கிருமி தொற்­றும் வாய்ப்பு குறைவு என்­ப­துமே இதற்­குக் கார­ணம் என்று சுகா­தார அமைச்சு விளக்­கி­யது.

ஆயி­னும், தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­தோர் நிகழ்ச்­சிக்­கு­முன் கொரோனா பரி­சோ­தனை செய்­து­கொண்டு, 'தொற்று இல்லை' எனச் சான்று பெற்­றால், ஐவர் குழு­வில் சேர்ந்து உண்­ண­லாம் என்று சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

கொரோனா தொற்­றில் இருந்து மீண்­ட­வர்­களும் குறைந்த அபா­யம் உள்­ள­வர்­க­ளா­கக் கரு­தப்­ப­டு­வ­தால் அவர்­களும் ஐவர்­வ­ரை­யி­லான குழுக்­களில் இடம்­பெற்று உண்ண முடி­யும் என்­றும் அமைச்சு கூறி­யி­ருக்­கிறது.

12 வய­திற்­குக் குறை­வான பிள்­ளை­க­ளைக் கொண்டுள்ள ஒரே குடும்­பத்­தி­ன­ரும் அதி­க­பட்­சம் ஐவ­ரைக் கொண்ட குழு­வா­கச் சேர்ந்து உண்ண முடி­யும். அந்­தக் குழந்­தை­கள் நிகழ்ச்­சிக்­கு­முன் கொரோனா பரி­சோ­தனை செய்­து­கொள்­ளத் தேவை­யில்லை.

சிங்­கப்­பூ­ரின் தேசிய தடுப்­பூ­சித் திட்­டத்­தின்­கீழ் 12 வய­திற்­குக் குறை­வான குழந்­தை­கள் தடுப்­பூசி போட தகு­தி­பெ­ற­வில்லை. அத்­து­டன், நிகழ்ச்­சிக்கு முந்­திய கொரோனா பரி­சோ­தனை நட­வடிக்­கை­யின்­போது குழந்தைகளிடம் எச்­சில்/சளி மாதிரி சேக­ரிப்­ப­தும் சவா­லானது என்று அமைச்சு குறிப்­பிட்­டது.

தங்­க­ளது செயல்­பாட்டு மாதிரி, வாடிக்­கை­யா­ளர்­க­ளைப் பொறுத்­தும் உண்ண வரு­வோர் தடுப்­பூசி போட்­டு­விட்­ட­னரா இல்­லையா என்­ப­தைச் சோதிக்க முடி­வ­தைப் பொறுத்­தும், தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோர், போடா­தோர்க்­கான குழு அள­வு­களை அறி­முகம் செய்­வதா இல்­லையா என்­பதை உணவு, பான நிலை­யங்­களே முடி­வு­செய்­ய­லாம்.

ஆனால், உண­வங்­காடி நிலை­யங்­களி­லும் காப்­பிக் கடை­க­ளி­லும் அதி­க­பட்­சம் இரு­வர் மட்­டுமே சேர்ந்து உண்ண முடி­யும்.

இந்த இடங்­களில் பொது­வாக 'சேஃப்என்ட்ரி' நுழைவு அனு­மதி முறை கட்­டா­ய­மாக்­கப்­ப­டு­வ­தில்லை என்­பதே இதற்­குக் கார­ணம். ஒரு மேசை­யில் சென்று அம­ரு­முன் தனி­ந­பர்­க­ளி­டம் சென்று அவர்­கள் தடுப்­பூசி போட்­டு­விட்­டாரா இல்­லையா என்­ப­தைச் சோதிப்­ப­தும் சவா­லா­னது என்று அமைச்சு விளக்­கியது. உணவு, பான நிலை­யங்­களில் நேரடி நிகழ்ச்­சி­கள், பதிவு செய்­யப்­பட்ட இசை ஒலி­ப­ரப்பு, காணொளி அல்­லது தொலைக்­காட்சி ஒளி­ப­ரப்பு ஆகி­ய­வற்­றுக்­கான தடை நீடிக்­கிறது.

தடுப்பூசி போடாத 140,000 முதியோர்மீது கவனம்

இன்­னும் கொவிட்-19 தடுப்­பூசி போட்டுக்­கொள்­ளாத, 70 வய­தும் அதற்­கும் மேற்­பட்ட 140,000 மேற்­பட்ட முதி­யோ­ரைச் சென்­ற­டை­வ­தில் கவ­னம் செலுத்­தப்­படும் என்று சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் தெரி­வித்து இருக்­கி­றார்.

இந்த எண்­ணிக்கை, அவ்­வ­ய­துப் பிரி­வி­ன­ரில் 29% எனக் கூறப்­பட்­டது. இதை­ய­டுத்து, அப்­பி­ரி­வி­ன­ரி­டத்­தில் தடுப்­பூசி விகி­தத்தை முடுக்­கி­வி­டும்­வி­த­மா­கச் சுகா­தார அமைச்சு அவர்­க­ளைச் சென்­ற­டைந்து வரு­கிறது.

எழு­பது வய­துக்கு மேற்­பட்­டோ­ரை­த் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள இணங்க வைக்­கும்­படி பொது மருத்­து­வர்­க­ளுக்­கும் அடிப்படைச் பரா­ம­ரிப்பு வழங்­கு­நர்­களுக்­கும் சுகா­தார அமைச்சு கடி­தம் அனுப்­பி­யுள்­ளது.

"ஒருங்­கி­ணைந்த பரா­ம­ரிப்பு அமைப்பு, மூத்த தலை­மு­றை­யி­னர் அலு­வ­ல­கம், மக்­கள் கழ­கம் ஆகி­ய­வற்­றின் தொண்­டூ­ழி­யர்­கள் தொடர்ந்து மூத்த குடி­மக்­களை நேரில் அணுகி, தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வ­தன் நன்­மை­க­ளைப் பகிர்ந்­து­கொள்­வர்," என்று கொவிட்-19 தொற்­றுக்­கெ­தி­ரான அமைச்­சு­கள்­நிலை பணிக்­கு­ழு­வின் நேற்­றைய செய்­தி­யா­ளர் சந்­திப்­பின்­போது சுகா­தார அமைச்­சர் ஓங் கூறி­னார்.

தடுப்­பூசி போட இணங்­கும் முதி­யோரில் எவ­ருக்­கே­னும் நட­மாட்­டப் பிரச்­சினை இருந்­தால் அவர்­களை தடுப்­பூசி மையத்­திற்கு அழைத்­துச் செல்­வ­தற்­கான ஏற்­பா­டு­க­ளைச் செய்­ய­வும் தொண்­டூ­ழி­யர்­கள் உத­வு­வர்.

கடந்த ஜூன் மாத இறுதி நில­வ­ரப்­படி, தடுப்­பூசி தொடர்­பில் மூத்த தலை­மு­றை­யி­னர் நாடு முழு­வ­தும் 650,000க்கும் மேற்­பட்ட மூத்த குடி­மக்­க­ளைச் சென்­ற­டைந்­த­தா­க­வும் அமைச்­சர் ஓங் குறிப்­பிட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!