இந்தியா: அடுத்த 100-125 நாள்கள் மிக முக்கியமான காலகட்டம்

இந்தியா: அடுத்த 100-125 நாள்கள் மிக முக்கியமான காலகட்டம்

2 mins read

பல நாடுகளிலும் சில இந்திய மாநிலங்களிலும் கொவிட்-19 பரவல் அதிகரித்து வருவதால், கொரோனா தொற்­றுக்கு எதி­ரான போரில் அடுத்த 100 முதல் 125 நாள்­கள் மிக முக்­கி­ய­மான கால­கட்­டம் என்று இந்திய சுகாதார அமைச்சு தெரிவித்து இருக்கிறது.

"கொரோனா பாதிப்பு குறைந்து இருக்­கிறது. இது எச்­ச­ரிக்­கை­யாக இருக்க வேண்­டி­ய­தற்­கான ஓர் அறி­குறி," என்று கொவிட்-19 தொற்­றுக்கு எதி­ரான தேசிய பணிக்­குழு­வின் தலை­வர் வி.கே.பால், சுகா­தார அமைச்­சின் வாராந்­திர செய்தி­யா­ளர் சந்­திப்­பின்போது கூறினார்.

உலகம் கொரோனா மூன்றாவது அலையை நோக்கிச் செல்வதைச் சிவப்பு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

"நிலைமை இப்­போது கட்­டுக்­குள் உள்­ளது. ஆனால், பொதுச் சுகா­தார நட­வ­டிக்­கை­க­ளைத் தீவி­ர­மாக எடுத்­துக்­கொள்­ளா­வி­டி­னும் தனி­ம­னி­தர்­கள் பொறுப்­பு­டன் நடந்து­கொள்­ளா­வி­டி­னும் நிலைமை மோச­மா­க­லாம்," என்று நிதி ஆயோக் அமைப்­பின் உறுப்­பி­ன­ரு­மான திரு பால் எச்­ச­ரித்­துள்­ளார்.

இத­னி­டையே, மிக எளி­தில் பாதிக்­கப்­பட வாய்ப்­புள்ள பிரி­வி­ன­ரில் குறைந்­தது 50 விழுக்­காட்­டி­னர் தடுப்­பூசி போட்­டு­விட்­ட­தா­கச் சுகா­தார அமைச்­சின் இணைச் செய­லா­ளர் லவ் அகர்­வால் தெரி­வித்­து உள்­ளார்.

ஆயினும், மக்­க­ளி­டம் முகக்­கவசப் பயன்­பாடு குறை­வாக இருப்­பது பற்றிக் கவலை தெரி­வித்த அவர், முகக்­க­வ­சம் அணி­வ­தைப் புதிய இயல்­பு­நி­லை­யா­கக் கரு­த­ வேண்­டும் என்று வலியுறுத்தினார்.

இதற்­கி­டையே, இந்­தி­யா­வில் கடந்த 24 மணி நேரத்­தில் புதி­தாக 38,079 பேர் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­னர்; 560 பேர் இறந்து­விட்­ட­னர். ஆக அதி­க­மாக கேர­ளா­வில் 13,750 பேரை­யும் மகா­ராஷ்­டி­ரா­வில் 7,761 பேரை­யும் கிருமி தொற்­றி­விட்­டது. மேலும், அந்த மா­நி­லங்­களில் முறையே 130 பேரும் 167 பேரும் இறந்­து­விட்­ட­னர்.