தளர்த்தப்பட்ட வேகத்திலேயே கொவிட்-19 கிருமிப் பரவலை முறியடிப்பதற்கான கட்டுப்பாடுகள் முடுக்கிவிடப்படுவதைத் தொடர்ந்து சில உணவு, பானத் துறை வர்த்தகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் திங்கட்கிழமையன்று கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.
ஆனால், கேடிவி கேளிக்கை இசைக் கூடங்களில் கொவிட்-19 கிருமிப் பரவல் பெரிய அளவில் இடம்பெற்றிருப்பதையொட்டி நாளை ( ஜூலை 19) முதல் கட்டுப்பாடுகள் முடுக்கிவிடப்படுகின்றன. இன்று முதல் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோர் ஒரு வேளையில் மேலும் ஒருவருடன் மட்டும்தான் உணவகங்களில் உணவருந்தலாம்.
உணவங்காடிகள், காப்பிக் கடைகள் ஆகியவற்றில் அந்த சலுகையும் கிடையாது, ஒரு நேரத்தில் இருவருக்கு மேல் அங்கே உணவருந்த முடியாது. ஏற்கெனவே கேடிவி இசைக் கூடங்களின் அலட்சியப் போக்கு, நிலைமையைச் சமாளிக்கத் தாங்கள் எடுத்த முயற்சிகளை எடுபடாமல் இருக்கச் செய்ததாகவும், இப்போது நிலவரம் மேலும் மோசமடைந்துள்ளதாகவும் சில உணவகங்கள் கருத்துரைத்தன.
இதனால் உணவு, பானத் துறையில் பணிபுரியும் நூறாயிரக்கணக்கான ஊழியர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்று அவை வருத்தம் தெரிவித்தன. நிலைமையைச் சமாளிக்கக் கூடுதல் உதவி வழங்குமாறும் சில வர்த்தகர்கள் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

