போலிசாருடன் கல்வியமைச்சு அணுக்கமாக செயல்படுகிறது: சான் சுன் சிங்

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும் பள்ளி பணியாளர்களுக்கும் முடிந்தவரையிலான அனைத்து உதவிகளையும் கல்வியமைச்சு செய்து வருவதாக அதன் அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்தார். ரிவர் வேலி பள்ளி வளாகத்தில் மாணவர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து அமைச்சரின் கருத்துகள் வெளிவந்துள்ளன.

மாலை சுமார் 4.25 மணிக்கு வெளியிடப்பட்ட தம் பேஸ்புக் பதிவில், மாணவர்கள் மற்றும் பள்ளி பணியாளர்களின் பாதுகாப்புக்கு அதிமுக்கியம் கொடுக்கப்படுவதாக அமைச்சர் கூறினார். 

“ரிவல் வேலை ஹை பள்ளியில் இன்று காலை நிகழ்ந்த இந்த துயர சம்பவம் குறித்து நாம் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளோம்,” என்று அவர் கூறினார்.

“விசாரணை பணிகளுக்காக சிங்கப்பூர் போலிஸ் படையுடன் நாம் அனுக்கமாக செயல்படுகிறோம். அவர்கள் கூடிய விரைவில் இந்தச் சம்பவம் குறித்த மேல் விவரங்களை வெளியிடுவர்,” என்று அவர் கூறினார். 

சம்பவத்தின் தொடர்பில் 16 வயது மாணவர் கைது செய்யப்பட்டார். பள்ளிகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க பெற்றோர்களுடனும் மாணவர்களுடனும் செயல்படவும் நம்பிக்கை மிகுந்த சூழலில் பிள்ளைகள் ஒன்றாக வளர்ந்து கற்க வழிசெய்யும் கல்வியமைச்சு உறுதியுடன் இருப்பதாக அவர் கூறினார். 

“நமது மாணவர்கள் அனைவருக்கும்: எப்போதும்போல நாங்கள் உங்களைப் பாதுகாப்போம்,” என்று அவர் குறிப்பிட்டார். 

“எவரிடமும் பேச உங்களுக்குத் தேவைப்பட்டால், அல்லது உதவி தேவைப்படுவோரை அறிந்தால் தயவுசெய்து பெரியவர்களுடன் பேசுங்கள். அவர்கள் உங்கள் ஆசிரியர்களாகவோ பள்ளி ஆலோசகர்களாவோ இருக்கலாம். நீங்கள் தனியாக இல்லை. உங்களுக்கு உதவ நாங்கள் என்றுமே தயாராக நிற்கிறோம்,” 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!