106 பேர் ஜூரோங் துறைமுகக் குழுமம், 19 பேர் கேடிவி குழுமத்துடன் தொடர்புள்ளவர்கள் 163 பேருக்கு சமூகத்தொற்று

சிங்­கப்­பூ­ரில் நேற்று பிற்­ப­கல் நில­வ­ரப்­படி சமூ­கத்­தில் புதி­தாக 163 பேர் கொவிட்-19 தொற்­றுக்கு ஆளா­னார்­கள். அவர்­களில் 106 பேர் ஜூரோங் மீன்­பி­டித் துறை­முகம், சந்தைகள், உண­வங்­காடி நிலை­யங்­களை உள்­ள­டக்­கிய தொற்­றுக் குழு­மத்­து­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள்.

இவர்­க­ளை­யும் சேர்த்து ஜூரோங் மீன்­பி­டித் துறை­முக தொற்­றுக் குழு­மத்­தில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் மொத்த எண்­ணிக்கை 169 ஆகக் கூடியுள்ளது.

புதி­தாக சமூ­கத்­தொற்­றுக்கு ஆளா­ன­வர்­களில் 19 பேர் கேடிவி தொற்­றுக் குழு­மத்­து­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள்.

இந்­தக் குழு­மத்­தில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் மொத்த எண்­ணிக்கை 192 ஆக இருக்­கிறது.

சமூ­கத்­தொற்­றுக்கு ஆளா­ன­வர்­களில் 66 பேர் ஏற்­கெ­னவே கிருமி தொற்­றி­ய­வர்­க­ளு­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள்.

அவர்­கள் முன்பே தனித்து வைக்­கப்­பட்­ட­வர்­கள். இதர 71 பேருக்கு தொற்று இருந்­தது, தடமறிதலின் வழி­யாகத் தெரி­ய­வந்­தது. 26 பேருக்கு தொற்று எப்­படி ஏற்­பட்­டது என்­பது தெரி­ய­வில்லை.

சமூ­கத்­தொற்­றுக்கு ஆளா­ன­வர்­களில் 70 வய­தைக் கடந்த தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளாத ஒரு முதி­ய­வ­ரும் இருப்­ப­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

வெளி­நா­டு­களில் இருந்து வந்த ஒன்­பது பேருக்­கும் கிரு­மித்­தொற்று இருந்­தது. அவர்­கள் இங்கு வந்­த­போது தனி­மைப்படுத்­தப்­பட்­ட­னர்.

தரை­யி­றங்­கிய நேரத்­தில் நால்­வ­ருக்கு கிரு­மித்­தொற்று இருந்­தது கண்­ட­றி­யப்­பட்­டது. தனி­மை­யில் இருந்தபோது இதர ஐவ­ருக்­குத் தொற்று ஏற்­பட்­டது.

சிங்­கப்­பூ­ரில் இது­வரை கொவிட்-19 தொற்று பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் மொத்த எண்­ணிக்கை 63,245 ஆக இருக்­கிறது.

இத­னி­டையே, சிங்­கப்­பூ­ரில் இப்­போது ஆகப் பெரி­தாக உரு­வெ­டுத்­துள்ள இரண்டு தொற்­றுக் குழு­மங்­களும் ஒன்­று­டன் ஒன்று தொடர்­பு­டை­யவை என்று சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் நேற்று தெரி­வித்­தார். இரண்­டுக்­கும் உள்ள தொடர்­பைக் கண்­ட­றிய ஆய்­வு­கள் நடந்து வரு­வ­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

டான் டோக் செங் மருத்துவ மனை மற்­றும் சாங்கி விமா­ன­நிலை­யம் ஆகிய குழு­மங்­களில் பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் ஒரு வகை டெல்டா கிருமி தொற்றி இருந்­தது.

அந்த உரு­மா­றிய கிரு­மிக்­கும் இப்­போ­தைய இரண்டு குழு­மங்­களில் பாதிப்பை ஏற்­ப­டுத்தி இருக்­கும் கிரு­மிக்­கும் இடை­யில் மர­பணு ரீதி­யில் வேறு­பாடு காணப்­படு­கிறது என்று திரு ஓங் ஃபேஸ்புக்­கில் நேற்று தெரி வித்தார்.­

ஆனால் இந்­தோ­னீ­சி­யா­வில் இருந்து வந்­த­வர்­க­ளி­டம் காணப்­பட்ட கிரு­மியை அந்த இரண்டு ஆகப் பெரிய குழு­மங்­களில் பாதிப்பை ஏற்­ப­டுத்தி இருக்­கும் கிருமி ஒத்து இருக்­கிறது என்­றும் அவர் தெரி­வித்­தார்.

இதன் தொடர்­பில் ஆய்­வு­கள் நடந்து வரு­கின்­றன.

அவை மூலம் திட்­ட­வட்­ட­மான முடி­வு­கள் தெரி­ய­வ­ரும்போது அவற்றை பொது­மக்­க­ளுக்கு சுகா­தார அமைச்சு தெரி­விக்­கும்.

இந்த நில­வ­ரங்­கள் ஒன்றைத் தெள்­ளத்­தெ­ளி­வாக உறு­தி­பட தெரி­விப்பதாகக் கூறிய அமைச்சர், இந்த வட்­டா­ரத்­தில் உள்ள நாடு­கள் பெரு­ம­ள­வில் பாதிக்­கப்­படும் போது அத­னால் எப்­போ­துமே நமக்கு ஆபத்து ஏற்­படும் என்று குறிப்­பிட்­டார்.

சிங்­கப்­பூ­ரில் ஞாயிற்­றுக்­கி­ழமை­யன்று 88 பேர் சமூ­கத்­தொற்­றுக்கு புதி­தாக ஆளா­னார்­கள்.

இந்த ஆண்­டில் இது­வரை ஒரு நாளில் அந்த அளவுக்குப் பாதிப்பு இல்லை என்­பதை திரு ஓங் சுட்­டிக்­காட்டி இருந்­தார்.

''டெல்டா உரு­மா­றிய கிருமி வேக­மாக பர­வும் என்­ப­தையே அது காட்­டு­கிறது.

''கேடிவி, ஜூரோங் மீன்­பி­டித் துறை­முகக் குழு­மங்­க­ளின் ஒட்டு­மொத்த விளை­வா­கவே அந்த அள­வுக்­குப் பாதிப்பு ஏற்­பட்டு இருக்­கிறது,'' என்று அமைச்­சர் குறிப்­பிட்டு இருந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!