ரிவர் வேலி உயர்நிலைப் பள்ளியில் கொலை என சந்தேகம்; 16 வயது மாணவர் கைது

ரிவர் வேலி உயர்­நி­லைப் பள்­ளி­யில் 4ஆம் வகுப்பு படிக்­கும் 16 வயது மாண­வரை போலிஸ் கைது செய்து உள்ளது. அவர் வேறு ஒரு மாண­ வரைக் கொலை செய்து இருப்ப தாகச் சந்­தே­கிக்­கப்­ப­டு­கிறது.

ஆதாரமாக ஒரு கோட­ரியை போலிஸ் அதி­கா­ரி­கள் கைப்­பற்றி இருக்­கி­றார்­கள். இந்­தச் சம்­ப­வம் அந்­தப் பள்­ளிக்­கூ­டத்­தில் நேற்று நிகழ்ந்­த­தாக போலிஸ் கூறியது.

அந்­தப் பள்­ளி­யில் உயர்­நிலை 1ஆம் வகுப்பு படிக்­கும் 13 வயது மாண­வர் முற்­ப­கல் சுமார் 11.40 மணிக்குப் பள்­ளிக்­கூடக் கழி­வறை­யில் உட­லில் பல காயங்­க­ளு­டன் விழுந்து கிடக்­கக் காணப்­பட்­டார்.

சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை­யைச் சேர்ந்த மருத்­துவ அதி­கா­ரி­கள் அந்த மாண­வர் இறந்­து­விட்­ட­தாக அதே இடத்­தில் அறி­வித்­த­னர். இந்­தச் சம்­ப­வத்­தில் சம்­பந்­தப்­பட்ட இரண்டு மாண­வர்­களும் ஒரு­வரை ஒரு­வர் அறி­யா­த­வர்­கள் என்­பது முதற்­கட்ட புலன்­வி­சா­ரணை மூலம் தெரி­ய­வந்து இருக்­கிறது. இந்­தத் தாக்­கு­த­லுக்­கான கார­ணத்­தைக் கண்­ட­றிய புலன்­வி­சா­ரணை நடப்­ப­தாக போலிஸ் தெரி­வித்­துள்­ளது.

கைதாகி இருக்­கும் மாண­வ­ரின் மன­ந­லனை மதிப்­பி­டு­வ­தற்­காக அவரை விசா­ர­ணைக் காவ­லில் வைக்­கு­மாறு கேட்­கும் எண்­ணத்­து­டன் இன்று அந்த மாண­வர் மீது கொலை குற்­றம் சுமத்­தப்­படும்.

போலி­ஸ் முழுமையான புலன்­வி­சாரணை நடத்­து­ம். எல்லா விவ­ரங்­களும் நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­படும் என்று போலிஸ் கூறியது.

இந்த விவ­கா­ரம் நீதி­மன்­றத்­துக்குப் போவ­தால் இதுபற்றி ஊகச் செய்­தி­களை வெளி­யிட்டு பாதிக்­கப்­பட்ட மாண­வ­ரின் குடும்­பத்­துக்கு சங்­க­டத்தை ஏற்­ப­டுத்­தா­மல் ஒதுங்கி இருக்­கும்­படி பொது­மக்­களை போலி­சார் கேட்­டுக்­கொண்டுள்ளனர்.

இத­னி­டையே, ரிவர் வேலி உயர்­நி­லைப்­பள்ளி மாண­வர்­கள், ஊழி­யர்­கள், அவர்­கள் குடும்­பத்­தார் அனை­வ­ருக்­கும் கூடு­மானவரை எல்லா ஆத­ர­வை­யும் தமது அமைச்சு அளித்து வரு­வ­தாக கல்வி அமைச்­சர் சான் சுன் சிங் நேற்று தெரி­வித்­தார். மாண­வர்­கள், ஊழி­யர்­களின் பாது­காப்­பும் நல்­வாழ்­வுமே மிக முக்­கி­ய­மா­னது என்­பதை நேற்று ஃபேஸ்புக் மூலம் அமைச்­சர் உறு­தி­படக் கூறி­னார்.

ரிவர் வேலி உயர்­நி­லைப்­பள்­ளி­யில் இந்­தச் சம்­ப­வம் நிகழ்ந்­தது பற்­றிய செய்தி கேட்டு நாம் அனை­வ­ருமே திடுக்­கிட்டுப் போன­தாக அமைச்­சர் கூறி­னார்.

புலன்­வி­சா­ர­ணை­யில் சிங்­கப்­பூர் போலி­சு­டன் அணுக்­க­மாக ஒத்­து­ழைத்து வரு­வ­தா­க­வும் பெற்­றோர்­கள், மாண­வர்­க­ளு­டன் செயல்­பட்டு பள்­ளிக்­கூ­டங்­க­ளைப் பாது­காப்­பா­ன­தாக வைத்­தி­ருக்க தமது அமைச்சு உறு­தி­பூண்டு இருப்­ப­தா­க­வும் அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!