இரண்டாம் கட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கை மீண்டும் ஆரம்பம்

இரண்டாம் கட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கை மீண்டும் ஆரம்பம்

1 mins read
f5c856f6-33ea-4cdb-9251-891936d615e7
-

கொவிட்-19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேலும் கடுமையாக்கப்படும். வியாழன் முதல் ஆகஸ்ட் 18 ஆம் தேதி வரை சிங்கப்பூர் மீண்டும் இரண்டாம் கட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைக்குச் செல்லும்.

இந்நேரத்தில் வெளியிடங்களில் உணவு உண்பது அனுமதிக்கப்படாது என்று வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்தார். இக்காலக்கட்டத்தில் உணவுக்கடைகள் உணவை பொட்டலமாக வழங்க முடியும் அல்லது விநியோகம் செய்ய முடியும்.

மேலும், சமூக ஒன்றுகூடலுக்காக அனுமதிக்கப்படும் அதிகபட்ச நபர்களின் எண்ணிக்கை ஐந்து முதல் இரண்டுக்குக் குறைக்கப்படும்.ஒரு வீட்டிற்கு ஒரே நாளில் இரண்டு நபருக்கு மேல் செல்ல முடியாது.