உணவகங்களில் சாப்பிடத் தடை: நாளை முதல் கடுமை

சமூ­கத்­தில் கொவிட்-19 கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் அதி­க­ரித்­த­தைத் தொடர்ந்து கட்­டுப்­பா­டு­கள் நாளை முதல் மீண்­டும் கடு­மை­யாக்­கப்­ப­டு­கின்­றன.

சிங்­கப்­பூர் மீண்­டும் இரண்­டாம் கட்ட (உயர்த்­தப்­பட்ட விழிப்­பு­நிலை) கட்­டுப்­பாடுகளை நாளை (ஜூலை 22) முதல் அறி­மு­கம் செய்­கிறது. இந்­தக் கடு­மை­யான கட்­டுப்­பா­டு­கள் ஆகஸ்ட் 18 வரை நீடிக்­கும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. அதற்­கி­ணங்க உண­வ­கங்­களில் உட்­கார்ந்து சாப்­பி­டு­வது தற்காலிக மாக தடைசெய்­யப்­ப­டு­வ­தாக வர்த்­தக தொழில் அமைச்­சர் கான் கிம் யோங் தெரி­வித்­துள்­ளார்.

அதே­நே­ரம் உணவு விநி­யோ­க­மும் வாடிக்­கை­யா­ளர்­கள் உணவு வாங்­கிச் செல்­வ­தும் தொட­ரும் என்­றார் அவர். இரு­வர் மட்­டும் உண­வ­கங்­களில் உட்­கார்ந்து சாப்­பி­டு­வது இன்­று­டன் நிறுத்­தப்படு­கிறது. சமூக ஒன்­று­கூ­டல்­களில் இரு­வ­ருக்கு மேல் ஒரு குழு­வில் இருக்­கக்­கூ­டாது என்­பது மற்­றொரு கட்­டுப்­பாடு. அதே­போல வீடு­க­ளுக்கு நாள் ஒன்­றுக்கு இரு தனிப்­பட்ட வரு­கை­யா­ளர்­கள் மட்­டுமே செல்ல வேண்­டும். தற்­போது அந்த எண்­ணிக்கை ஐந்­தாக உள்­ளது.

சிங்­கப்­பூ­ரில் கொள்­ளை­நோய் பர­வத் தொடங்­கி­ய­தற்­குப் பிறகு ஆக அதிக அள­வி­லான தொற்­றுச் சம்­ப­வங்­கள் திங்­கட்­கி­ழமை இரண்­டா­வது நாளா­கப் பதி­வா­ன­தைத் தொடர்ந்து கொவிட்-19க் கான அமைச்­சு­கள்­நிலை பணிக்­குழு கட்­டுப்­பா­டு­களை மீண்­டும் கடு­மை­யாக்கி உள்­ளது.

திங்­கட்­கி­ழமை உள்­ளூ­ரில் 163 கிரு­மித்­தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வா­யின. அவற்­றுள் பெரும்­பா­லா­னவை ஜூரோங் மீன்­பிடி வர்த்­த­கத் துறை­மு­கக் கிரு­மித்­தொற்­றுக் குழு­மத்­து­டன் தொடர்­பு­டை­யவை. அந்தக் குழு­மத்­து­டன் ஈரச்­சந்­தை­கள், உண­வங்­காடி நிலை­யங்­கள் போன்­றவை தொடர்­பு­டைய மேலும் சில தொற்­றுக் குழு­மங்­கள் கண்­ட­றி­யப்­பட்­ட­தாக சுகா­தார அமைச்சு நேற்று கூறி­யது.

"இது மிக­வும் கவலைக்­கு­ரி­யது. இந்­தத் தொற்­றுப் பர­வல் தீவு முழு­வ­தும் நமது சமூ­கத்­தில் பல­ரை­யும் பாதிக்­கக்­கூ­டி­யது," என்று அமைச்­சின் அறிக்கை குறிப்­பிட்­டது. தற்­போ­தைய புதிய கட்­டுப்­பா­டு­கள் ஏற்­கெ­னவே கடந்த மே மாதம் சாங்கி விமா­ன­நி­லைய குழு­மம் உரு­வா­ன­போது நடப்­பில் இருந்­தன. தற்­போது மீண்­டும் பழைய கட்­டுப்­பாட்டு நிலைக்­குச் செல்­வது பெரி­ய­தொரு பின்­ன­டைவு என்று பணிக்­குழு தெரி­வித்­தது.

தேசிய தினத்­திற்­குள் மூன்­றில் இரு பகுதி மக்­க­ளுக்கு முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட­வேண்­டும் என்­னும் இலக்கை அடை­வ­தற்­குப் போது­மான கால அவ­கா­சத்­தைப் பெறும் நோக்­கு­டன் கட்­டுப்­பா­டு­கள் கடு­மை­யாக்­கப்­ப­டு­வ­தாக பணிக்­கு­ழு­வின் இணைத் தலை­வ­ரும் சுகா­தார அமைச்­ச­ரு­மான ஓங் யி காங் நேற்­றைய மெய்­நி­கர் செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் கூறி­னார்.

அந்த நிலையை அடைந்­து­விட்­டால் நாள் ஒன்­றுக்கு 100 அல்­லது 200 புதிய தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வா­னா­லும் பாது­காப்­பாக இருக்­கும் நம்­பிக்­கையை சிங்­கப்­பூர் பெறும் என்­றார் அவர்.

"என­வே­தான், நீண்ட, தீவிர யோச­னைக்­குப் பின்­னர் கடு­மை­யான கட்­டுப்­பா­டு­களை மீண்­டும் செயல்­ப­டுத்த முடி­வெ­டுக்­கப்­பட்­டது. இன்­னும் சில வாரங்­களில் தடுப்­பூசி இலக்கை நாம் அடைந்து­ விட்­டால் அதன் பின்­னர் மேலும் உறு­தி­மிக்க மீட்­சியை நோக்­கிய மாற்­றத்­திற்கு நாம் தயா­ராக முடி­யும்.

"தற்­போ­தைய நிலை­மை­யைச் சிர­மப்­பட்டு சமா­ளித்­தாக வேண்­டிய அவ­சி­யம் எழுந்துள்ளது. சமூக நட­வ­டிக்­கை­களில் பழைய கட்­டுப்­பாடு­க­ளைக் கொண்­டு­வர வேண்­டி­யுள்­ளது. இந்த நேரத்தை தடுப்­பூசி போட்­டு­க்கொளும் முயற்­சி­

க­ளுக்கு மக்­கள் பயன்­ப­டுத்த வேண்­டும்," என்றார் திரு ஓங்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!