சிங்கப்பூரின் உள்ளூர் கொவிட்-19 கிருமித்தொற்று சம்பவங்கள் நேற்று உச்சத்தைத் தொட்டன. புதிதாக 182 பேருக்குத் தொற்று உறுதி செய்யப் பட்டது. இவர்களில் 135 பேர் ஜூரோங் மீன்பிடி வர்த்தகத் துறைமுகம், ஈரச்சந்தைகள் மற்றும் உணவங்காடி நிலையங் களின் தொற்றுக்குழு மங்களுடன் தொடர்புடை யவர்கள் என சுகாதார அமைச்சு கூறியது. 12 பேர் மற்றொரு தொற்றுக் குழும மான கேடிவியுடன் தொடர் புடையவர்கள். இதனைத் தொடர்ந்து ஜூரோங் குழு மத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 314 ஆக வும் கேடிவி குழுமத்தில் பாதிக்கப்பட்டோர் எண் ணிக்கை 205ஆகவும் அதிகரித்துள்ளன. எவ்வித தொடர்புமின்றி நோய் தொற்றிய 26 பேரும் நேற்றைய எண்ணிக்கை யில் அடக்கம். வெளிநாடு களிலிருந்து வந்த 13 பேரை யும் சேர்த்து நேற்றைய தொற்று எண்ணிக்கை 195 ஆகப் பதிவானது. 2020 ஜூலை 10க்குப் பிறகு ஒரே நாளில் பதிவான ஆக அதிக எண்ணிக்கை இது.
182 பேருக்கு தொற்று: சிங்கப்பூரில் உச்சம்
1 mins read

