16 வயது மாணவர் மீது கொலைக் குற்றம்

ஏற்கெனவே தற்கொலைக்கு முயன்றதால் மனநலச் சோதனை நடத்த கோரிக்கை

ரிவர் வேலி உயர்­நி­லைப் பள்­ளி­யில் சக மாண­வரை கொலை செய்­த­தாக 16 வயது சிறு­வன் மீது நேற்று நீதி­மன்­றத்­தில் குற்­றம் சுமத்­தப்­பட்­டது. பதின்ம வய­து­டை­ய­வர் என்­ ப­தால் அச்­சி­று­வ­னைப் பற்­றிய அடை­யா­ளங்­கள் வெளி­யி­டப்­ப­ட­வில்லை. 6 பூன் லே அவென்­யூ­வில் அமைந்­துள்ள பள்­ளிக்­கூ­டத்­தின் நான்­கா­வது மாடி கழி­வ­றை­யில் திங்­கட்­கி­ழமை (ஜூலை 19) முற்­

ப­கல் 11.16 மணிக்­கும் 11.44 மணிக்­கும் இடைப்­பட்ட நேரத்­தில் உயர்­நிலை 1 மாண­வ­ரான 13 வயது சிறு­வ­னின் மர­ணத்­திற்கு இச்­சி­று­வனே கார­ணம் என்று குற்­றச்­சாட்­டில் கூறப்­பட்­டது.

விசா­ர­ணைக் காவ­லில் வைக்­கப்­பட்­டுள்ள உயர்­நிலை 4 மாண­வ­ரான இச்­சி­று­வன், காணொளி வாயி­லாக நீதி­மன்­றத்­தில் முன்­னி­லை­யா­னார். நீதி­பதி கேட்ட சில குறிப்­பிட்ட கேள்­வி­க­ளுக்கு 'ஆமாம்' என்று இவர் பதி­ல­ளித்­தார்.

மன­ந­லன் பற்றி சோதித்து அறி யும் பொருட்டு சிறு­வனை சாங்கி மருத்­துவ நிலை­யத்­தில் காவ­லில் வைக்க காவல்­துறை சார்­பில் முன்­னி­லை­யான அர­சுத் தரப்பு வழக்­க­றி­ஞர் நீதி­மன்­றத்­தின் அனு­ம­தியை கோரி­னார். 2019ஆம் ஆண்டு சிறு­வன் 14 வய­தாக இருந்­த­போது தற்­கொ­லைக்கு முயன்ற சம்­ப­வம் ஒன்­றில் காவல்­துறை தலை­யிட்­டது.

அப்போது பாது­காப்­புக்­காக அழைத்­துச் செல்­லப்­பட்ட சிறு­வன், மன­நல சுகா­தா­ரக் கழ­கத்­தில் அனு ­ம­திக்­கப்­பட்டு பின்­னர் வீடு திரும்­பி­ய­தாக அவ்­வ­ழக்­க­றி­ஞர் தெரி­வித்­தார். இச்­சம்­ப­வத்­தின் அடிப்­

ப­டை­யில் மாணவனின் மன­ந­லனை மதிப்­பிடவேண்­டிய தேவை எழுந்­துள்­ள­தாக அவர் குறிப்பிட்டார்.

மாணவன் சார்­பில் முன்­னி­லை­யான வழக்­க­றி­ஞர் பீட்­டர் கீத் ஃபெர் னாண்­டோ, தற்­கொ­லை முயற்சி சம்பவத்தை உறுதி செய்­த­து­டன் உயர்­நிலை 2ல் சிறு­வன் படித்­துக்­கொண்­டி­ருந்­த­போது அச்­சம்­ப­வம் நிகழ்ந்­த­தா­கக் கூறி­னார்.

தங்கள் மகனைப் பிர­தி­நி­தித்து முன்­னி­லை­யா­கு­மாறு மாணவனின் பெற்­றோர் திங்­கட்­கி­ழமை இரவு தம்­மைக் கேட்­டுக்­கொண்­ட­தா­க­வும் இருப்­பி­னும் நீதி­மன்­றம் வரப்­போ­வ­தில்லை என பெற்றோர் கூறி­ய­தா­க­வும் திரு பீட்­டர் தெரி­வித்­தார்.

கொலைக்­ குற்­றத்­துக்கு மரண தண்­டனை விதிக்­கப்­படும் என்ற போதி­லும் 18 வய­துக்கு உட்­பட்­ட­வர்­க­ளுக்கு ஆயுள் தண்­டனை விதிக்­கவே சட்­டத்­தில் இட­முண்டு. இதற்­கி­டையே, உயி­ரி­ழந்த மாண­வ­ருக்கு அஞ்­சலி செலுத்த நேற்று ஏரா­ள­மா­னோர் முன்­வந்­த­னர். பள்­ளி­யின் வாச­லில் பிற்­ப­கல் நில­வ­ரப்­படி 60க்கும் மேற்­பட்ட பூங்­கொத்­து­கள் வைக்­கப்­பட்டு இருந்­தன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!