சமூகத்தில் புதிதாக 179 பேருக்கு கொவிட்-19 தொற்று

சமூகத்தில் புதிதாக 179 பேருக்கு கொவிட்-19 தொற்று

1 mins read

சிங்கப்பூரில் நேற்று புதிதாக 179 பேர் கொவிட்-19 சமூகத்தொற்றுக்கு ஆளானார்கள். அவர்களில் 130 பேர் ஜூரோங் மீன்பிடித் துறைமுகம், ஈரச் சந்தைகள் மற்றும் உணவங்காடி நிலையங்களுடன் தொடர்புடைய குழுமத்தைச் சேர்ந்தவர்கள்.

இவர்களையும் சேர்த்து ஜூரோங் மீன்பிடித் துறைமுக தொற்றுக் குழு மத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 451 ஆக அதிகரித்துள்ளது.

சமூகத்தொற்றுக்கு ஆளானவர்களில் எட்டு பேர் கேடிவி குழுமத்துடன் தொடர்புடையவர்கள். இப்போது இந்தக் குழுமத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 215 ஆகியது.

சமூகத்தொற்றுக்குப் புதிதாக ஆளானவர்களில் 80 பேர் முந்தைய கொவிட்-19 நோயாளிகளுடன் தொடர்பு உடையவர்கள். அவர்கள் ஏற்கெனவே தனித்து வைக்கப்பட்டு இருந்தனர்.

தடமறிதல் மூலம் 69 பேருக்குத் தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்ட தாகவும் 30 பேருக்குத் தொற்று எப்படி ஏற்பட்டது என்பது தெரியவில்லை என்றும் சுகாதார அமைச்சு கூறியது.

புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 70 வயதைக் கடந்த நான்கு முதியவர் களும் இருக்கிறார்கள். இவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள்.

நேற்று புதிதாக தொற்று ஏற்பட்ட மொத்தம் 181 பேரில் வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்த இரண்டு பேரும் அடங்குவர்.