ஈரச்சந்தைகளில் வழக்கத்திற்கு மாறான அமைதி

ஈரச்சந்தைகளில் வழக்கத்திற்கு மாறான அமைதி

2 mins read
eaf1d031-63bc-4525-af09-b9711f1a90a2
-

சிங்கப்பூரில் இன்று கொவிட்-19 பாதுகாப்பு விதிமுறைகள் மீண்டும் கடுமையாக்கப்பட்டதைத் தொடர்ந்து ஈரச்சந்தைகள், உணவங்காடி நிலையங்கள், காப்பிக்கடைகள் ஆகிய இடங்கள் வழக்கத்திற்கு மாறாக அமைதியாகக் காணப்பட்டன.

தெலுக் பிளாங்கா, கேலாங் பாரு, ஆமோய் ஸ்திரீட், தோ பாயோ வெஸ்ட், பொத்தோங் பாசிர் ஆகிய பகுதிகளில் உள்ள ஈரச்சந்தைகளில் நிலவரத்தைக் கண்டறிய ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்திக்குழு நேற்றுக் காலை அங்கு சென்றது. அங்குள்ள பல மீன்கடைகள் மூடப்பட்டிருந்தன. கடைக்காரர்கள், தங்களுக்கு 'கொவிட்-19 தொற்று இல்லை' என்பதை பிசிஆர் பரிசோதனை முடிவுகள் காட்டிய பின்னரே கடைகளைத் திறக்க முடியும்.

இங்குள்ள சந்தைகளுக்குள் நுழைய டிரேஸ்டுகெதர் செயலி அல்லது கருவியைக் கொண்டு பதிவுசெய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக, கேலாங் பாரு சந்தை வளாகத்தில் பிளாஸ்டிக் தடுப்புவேலிகள் போடப்பட்டுள்ளன. சந்தைக்குள் நுழையவும் அங்கிருந்து வெளியேறவும் தனித்தனி வழிகள் உள்ளன.

வாடிக்கையாளர்கள் டிரேஸ்டுகெதரை கொண்டு பதிவுசெய்வதை உறுதிசெய்ய சந்தையின் நுழைவாயில் வெளிவாயில் பகுதிகளில் பாதுகாப்பு இடைவெளி அதிகாரிகள் பணியில் இருந்தனர்.

புளோக் 201C தெம்பனிஸ் ஸ்திரீட் 21, தெலுக் பிளாங்கா கிரெசண்ட் புளோக் 11 ஆகிய இடங்களில் உள்ள இரு ஈரச்சந்தைகளுக்கும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்திக்குழு சென்றது. அங்கும் இதே நடைமுறை நடப்பில் உள்ளது.

உணவங்காடி நிலையங்களும் காப்பிக்கடைகளும் நேற்று அமைதியாக காணப்பட்டன. அங்கு அமர்ந்து உணவருந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவைப் பொட்டலம் கட்டி வாங்கிச் செல்ல மட்டுமே அனுமதி உண்டு.

மேலும், சமூக ஒன்றுகூடல் எண்ணிக்கையும் ஐந்திலிருந்து இரண்டாகக் குறைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள ஐந்து உணவகங்காடி நிலையங்களிலும் இரு காப்பிக்கடைகளிலும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்திக்குழு நேற்று நிலவரத்தைக் கண்டறிந்தது. மக்கள் இருவர் கொண்ட குழுக்களாகவும் தனியாகவும் காணப்பட்டனர்.

தெலுக் பிளாங்கா கிரெசண்ட் புளோக் 11 சந்தை மற்றும் உணவு நிலையத்தில் பாதியளவு உணவுக்கடைகள் மூடப்பட்டிருந்தன. பாதுகாப்பு இடைவெளித் தூதர்கள் இருவர் கண்கானிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

சமூக அளவில் கிருமித்தொற்று அதிகரித்துள்ள நிலையில், வெளியே செல்ல மக்கள் அஞ்சுவதால் கூட்டம் குறைந்துவிட்டதாக கடைக்காரர்கள் கூறினர்