தேசிய தின அணிவகுப்பு - ஆகஸ்ட் 21ஆம் தேதி

தேசிய தின அணிவகுப்பு - ஆகஸ்ட் 21ஆம் தேதி

1 mins read
3bb2a0c0-c045-4641-ac85-a91bcf642124
-

தேசிய தின அணிவகுப்பு, ஆகஸ்ட் 21ஆம் தேதிக்­குத் தள்­ளி­ வைக்­கப்­ ப­டு­ம் என்று தற்­காப்பு அமைச்சு அறி­வித்­துள்­ளது.

மாறாக, ஆகஸ்ட் 9ஆம் தேதி­யன்று சடங்­கு­பூர்வ அணி­வகுப்பு இடம்­பெ­றும். அந்­தச் சடங்கு­பூர்வ அணி­வ­குப்பு கடந்த ஆண்டு பாடாங்­கில் இடம்­பெற்­ற­தைப் போன்­ற­தாக இருக்­கும். ஆகஸ்ட் 9ஆம் தேதி தேசிய தினத்­தன்று மரினா பே மிதக்­கும் மேடை­யில் இடம்­பெ­ற­வி­ருந்த அணி­வகுப்பு, இம்­முறை அது மரினா பே மிதக்­கும் மேடை­யில் இடம்­பெறும். அடுத்த மாதம் 7, 8ஆம் தேதி­களில் இடம்­பெ­றும் என அறி­விக்­கப்­பட்­டி­ருந்த வாண­வே­டிக்­கை­களும் செஞ்­சிங்­கங்­க­ளின் சாகச நிகழ்ச்­சி­களும் ரத்து செய்­யப்­படும்.

இதனிடையே, பிர­த­ம­ரின் தேசிய தினப் பேரணி உரை ஆகஸ்ட் 29ஆம் தேதி இடம்­பெ­றும் என்று பிரதமர் அலுவலகம் அறிவித்து இருக்கிறது.