அதிபர் : மனநல உதவி இளையர்களுக்கு அதிகம் தேவை

அதிபர் : மனநல உதவி இளையர்களுக்கு அதிகம் தேவை

1 mins read
a1a8b1c0-41c1-4ba2-8748-53af2d2cc412
-

மனநல சுகாதார பாதிப்புகளால் சிரமப்படும் இளையர்களைக் கையாள்வதற்கு பெற்றோர்கள், பள்ளிகள் மற்றும் சமூகத்திற்குப் போதிய வளங்கள் இல்லை என்று அதிபர் ஹலிமா யாக்கோப், தமது பேஸ்புக் பதிவு ஒன்றில் குறிப்பிட்டார். இளையர்களைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு ஆதரவைத் தருவதற்கு நிறைய செய்யலாம் என்று அவர் கூறினார்.

இளம் வயதில் ஏற்படும் மனநோயால் உண்டாகும் விளைவுகள் பிற்காலத்தில் ஏற்படும் மனநலப் பாதிப்புக்குப் பல்வேறு காரணங்கள் இருக்கக்கடும் என்று குறிப்பிட்டார்.

ரிவர் வேலி ஹை பள்ளியில் 13 வயது மாணவரை 16 வயது மாணவர் கொலை செய்த சம்பவத்தை அடுத்து அவரது பதிவு வெளிவந்துள்ளது. ஈராண்டுகளுக்கு முன்னதாக அந்த 16 வயது மாணவர், சொந்த உயிரை மாய்ததுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டதாக நீதிமன்றத்தில் தெரிய வந்தது.

சொந்த உயிரை மாய்த்துக்கொள்ளும் முயற்சிகள், உதவிக்கான வேண்டுகோள் எனத் தமது பதிவில் குறிப்பிட்ட அதிபர் ஹலிமா, மனநல பாதிப்புக்குப் பல்வேறு காரணங்கள் இருக்கக்கூடும் எனக் கூறினார்.