கடந்த ஆண்டு நடைபெறவிருந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் கொவிட்-19 பரவல் காரணமாக ஓராண்டுகாலம் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், தோக்கியோவில் உள்ள ஒலிம்பிக் விளையாட்டரங்கில் அதன் தொடக்கவிழா மிகப் பிரம்மாண்டமான முறையில் நேற்று நடந்தேறியது. மொத்தம் 68,000 பேர் அமர்ந்து பார்க்கும் வசதிகொண்ட அந்த அரங்கில் பார்வையாளர்களாக சில நூறு பேரே அனுமதிக்கப் பட்டனர். ஆகஸ்ட் 8ஆம் தேதிவரை நடக்கவிருக்கும் ஒலிம்பிக்கில் மொத்தம் 33 விளையாட்டுகளில் 339 போட்டிகள் இடம்பெறவுள்ளன. போட்டிகள் நடக்கவிருக்கும் 42 விளையாட்டரங்குகளில் ஐந்தில் மட்டுமே ரசிகர்கள் அனுமதிக்கப்படுவர். பதக்கங்களைக் குறிவைத்து சிங்கப்பூர் விளையாட்டாளர்கள் 23 பேர் ஜப்பான் சென்று இருக்கின்றனர். படம்: ஏஎஃப்பி
ஒளிவெள்ளம், வண்ணமயத்துடன் ஒலிம்பிக் தொடக்கம்
1 mins read
-

