கொவிட்-19 தொடர்பான சிக்கல்களால் 83 வயது மூதாட்டி பலி

கொவிட்-19 தொடர்பான சிக்கல்களால் 83 வயது மூதாட்டி பலி

1 mins read
94dc5241-66f7-4a4c-92f2-3dd5b508282c
-

தடுப்பூசி போடாதிருந்த 83 வயது சிங்கப்பூர் மூதாட்டி, கொவிட்-19 தொடர்பிலான சிக்கல்களால் நேற்று இறந்தார். புக்கிட் மேரா வியூவில் தங்கும் அவர், புளோக் 121 புக்கிட் மேரா வியூ கிருமித்தொற்று குழுமத்துடன் தொடர்புடையவர் என்நு சுகாதார அமைச்சு கடந்த இரவு தெரிவித்தது.

ஜூன் 16ஆம் தேதியன்று அந்த மூதாட்டியிடம் பாதிப்புக்கான அறிகுறிகள் தென்பட்டன. ஆயினும், இரண்டு நாட்களுக்கு அவர் மருத்துவரை நாடவில்லை. பின்னர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். உயர் ரத்த அழுத்தம், உயர் ரத்த கொழுப்பு ஆகிய உபாதைகளால் அவர் ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்.

கொவிட்-19 தொடர்பான உடல்நிலை சிக்கல்களால் இதுவரை இங்கு 37 பேர் மாண்டுள்ளனர். சுகாதார அமைச்சு நேற்று இரண்டு கிருமித்தொற்றுக் குழுமங்களைத் திறந்துள்ளது. அதே வேளையில் இரண்டு கிருமித்தொற்று குழுமங்கள் மூடப்பட்டுள்ளன.