கட்டாய கிருமிப் பரிசோதனை: பிரதமர் லீ பார்வையிட்டார்

அங் மோ கியோ அவென்யூ 10ல் இருக்­கும் புளோக் 456ல் வசிப்­போ­ருக்கு நேற்று கட்­டாய கொவிட்-19 பரி­சோ­தனை நடத்­தப்­பட்­டது.

அங் மோ கியோ குழுத்­தொகுதி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களில் ஒரு­வ­ரான பிர­த­மர் லீ சியன் லூங், நேற்று பிற்­ப­கல் சுமார் 12.20 மணிக்கு பரி­சோதனை நிலை­யத்­திற்­குச் சென்று குடி­யி­ருப்­பா­ளர்­கள், கடை உரி­மை­யா­ளர்­கள், பரி­சோ­தனை ஊழி­யர்­கள் ஆகி­யோ­ரு­டன் சுமார் அரை மணி நேரம் உரை­யா­டி­னார்.

அந்த புளோக்­கில் வசிக்­கும் நான்கு குடும்­பத்­தி­ன­ரி­டையே எட்­டுப் பேருக்கு கொரோனா தொற்று இருந்­தது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. அதை­ய­டுத்து அதே புளோக்­கில் வேறு யாருக்­கா­வது தொற்று இருக்­குமா என்­ப­தைக் கண்­ட­றிய சுகா­தார அமைச்சு கட்­டா­யப் பரி­சோ­த­னை­யைத் தொடங்­கி­யது.

தொற்று ஏற்­பட்ட அந்த எட்டு பேரில் பெரும்­பா­லா­ன­வர்­கள் ஜூரோங் மீன்­பி­டித் துறை­முக தொற்­றுக் குழு­மத்­து­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள் என்று சுகா­தார அமைச்சு தெரி­வித்து இருந்­தது.

புளோக் 456ல் உள்ள கடை உரி­மை­யா­ளர்­கள், ஊழி­யர்­க­ளை­யும் அமைச்சு பரி­சோ­தித்து வரு­கிறது. சென்ற செவ்­வாய்க்­கி­ழமை முதல் பரி­சோ­தனை மூலம் தொற்று இல்லை என்று தெரிய வந்­தி­ருப்­போர், விரும்­பி­னால் மீண்­டும் பரி­சோ­தித்­துக் கொள்­ள­லாம்.

சமூ­கத்­தில் அறி­குறி தெரி­யா­மல் யாருக்­கா­வது தொற்று இருக்­கி­றதா என்­ப­தைக் கண்­ட­றி­ய­வும் அமைச்சு முயன்று வரு­கிறது. புளோக் 456ல் குடி­யி­ருக்­கும் மக்­களு­டன் ஜூலை 9ஆம் தேதிக்­கும் 23ஆம் தேதிக்­கும் இடைப்­பட்ட நாட்­களில் யாரே­னும் தொடர்­பில் இருந்­தி­ருந்­தால் அல்­லது அந்த புளோக்­குக்கு யாரா­வது சென்று வந்­தி­ருந்­தால், விருப்ப அடிப்­ப­டை­யில் அவர்­கள் பரி­சோதனை செய்­து­கொள்­வ­தற்­கான ஏற்­பா­டு­க­ளை­யும் அமைச்சு செய்­துள்­ளது.

இந்­தப் பரி­சோ­தனை, நாளை வரை அங் மோ கியோ அவென்யூ 10ல் இருக்­கும் புளோக் 460Aல் நடக்­கும்.

விரைவு பரி­சோ­தனை

நிலை­யங்­கள் அதி­க­ரிப்பு

இதற்­கி­டையே, கொரோனா கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுக்­குள் கொண்­டு­வ­ரும் தீவிர முயற்­சி­யாக சிங்­கப்­பூ­ரில் இது­வரை 16 விரைவு பரி­சோ­தனை நிலை­யங்­கள் அமைக்­கப்­பட்­டு­விட்­டன என்­றும் மேலும் நான்கு நிலை­யங்­கள் கூடிய விரை­வில் அமைக்­கப்­படும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஒவ்­வொரு பரி­சோ­தனை நிலை­ய­மும் ஒரு நாளில் 400 முதல் 1,000 பேருக்கு கொரோனா கிரு­மிக்கு எதி­ரான பரி­சோ­தனை செய்­யும் ஆற்­றல் கொண்­டது. இதன் அடிப்­ப­டை­யில் இந்­நி­லை­யங்­களில் குறைந்­தது 6,400 பரி­சோ­த­னை­க­ளா­வது ஒரு நாளில் செய்து முடிக்­கப்­ப­ட­லாம்.

அங் மோ கியோ, பீஷான், ஹவ்­காங், ஜூரோங் வெஸ்ட், பாசிர் ரிஸ் ஆகி­ய­வற்­று­டன் மேலும் பல வட்­டா­ரங்­களில் இந்த நிலை­யங்­கள் அமைந்­துள்­ளன. ஜூன் 21க்கும் சென்ற புதன்­கி­ழ­மைக்­கும் இடைப்­பட்ட நாட்­களில் சுமார் 13,900 பரி­சோ­த­னை­கள் செய்­யப்­பட்­டுள்­ள­தாக சுகா­தார மேம்­பாட்டு வாரி­யம் தெரி­வித்­துள்­ளது. பரி­சோ­தனை பணி­களை மேற்­கொள்­ளும் அள­வுக்கு இட­வசதி உள்­ளதா என்­பதை ஆராய்ந்து பரி­சோ­தனை நிலை­யத்தை அமைக்­கும் இடம் தேர்­வா­வ­தாக விளக்­கப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!