சமூகத்தில் மேலும் 117 பேர் பாதிப்பு

சமூகத்தில் மேலும் 117 பேர் பாதிப்பு

1 mins read

உள்­ளூ­ரில் மேலும் 117 பேருக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று இருப்­பது உறு­தி­யா­கி­யுள்­ளது. அவர்­களில் 46 பேர் ஜூரோங் மீன்­பி­டித் துறை­மு­கக் குழு­மத்­து­டன் தொடர்பு உடை­ய­வர்­கள். இத்­து­டன் அக்­கு­ழு­மத்­தில் கிருமி தொற்­றியோர் எண்­ணிக்கை 787ஆக உயர்ந்­துள்­ளது. கேடிவி குழு­மத்­தில் மேலும் ஐவர் கொவிட்-19 கிரு­மி­யால் பாதிக்­கப்­பட, அக்­கு­ழு­மத்­தில் இது­வரை மொத்­தம் 237 பேர் பாதிக்­கப்­பட்­டு­ள்ளனர்.

உள்­ளூ­ரில் புதி­தாக பாதிக்­கப்­பட்­ட­வர்­களில், 43 பேர் ஏற்­கெ­னவே கிருமி தொற்­றி­யோ­ரு­டன் தொடர்­பில் இருந்­த­வர்­கள். அவர்­கள் ஏற்­கெ­னவே தனி­மைப்­ப­டுத்­தப்­பட்டுவிட்­டனர். கண்­கா­ணிப்­புப் பரி­சோதனை­கள்­ மூ­லம் மேலும் 36 பேர் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டி­ருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டது. தொடர்பு கண்­ட­றி­யப்­ப­டாத 38 பேரும் புதிய எண்­ணிக்­கை­யில் அடங்­கு­வர்.

பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் இரு­வர் 70 வய­திற்கு மேற்­பட்­ட­வர்­கள். அவர்­கள் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர்கள் அல்­லது ஒரு­முறை மட்­டுமே தடுப்­பூசி போட்­டுக்கொண்­ட­வர்கள் ஆவர்.

வெளி­நாட்­டி­லி­ருந்து வந்த எண்­ம­ருக்­கும் கிரு­மித்­தொற்று இருப்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. இது­வரை சிங்­கப்­பூ­ரில் கொரோனா பாதிப்பு 64,179ஐ எட்­டி­விட்­டது.