ஒரே நாளில் 17,045 பேருக்கு கொவிட்-19 மலேசியாவில் 3வது நாளாக புதிய உச்சம்

மலே­சி­யா­வில் நேற்று மூன்­றா­வது நாளாக புதிய உச்­சத்­தில் 17,045 புதிய கொவிட்-19 சம்­ப­வங்­கள் பதி­வா­கின. கொள்­ளை­நோய் நாட்டை ஆட்­டிப்­ப­டைக்­கத் தொடங்­கி­ய­தில் இருந்து நேற்று பதி­வான சம்­ப­வங்­க­ளு­டன் மொத்த கிரு­மித்­தொற்று எண்­ணிக்கை ஒரு மில்­லி­ய­னைத் தாண்­டி­விட்­டது.

இதற்கு முன் வெள்­ளிக்­கி­ழமை அன்­றும் நேற்று முன்­தி­ன­மும் நாள் ஒன்­றுக்கு 15,000க்கும் மேற்­பட்ட கொரோனா கிரு­மித்­தொற்­றுச் சம்­ப­வங்­கள் மலே­சி­யா­வில் பதி­வாகி வந்­தன. நேற்­றைய சம்­ப­வங்­க­ளு­டன் மலே­சி­யா­வின் மொத்த கிருமி பாதிப்பு எண்­ணிக்கை 1.013 மில்­லியனை எட்­டி­விட்­டது.

தலை­ந­க­ரான கோலா­லம்­பூர், மலே­சி­யா­வி­லேயே ஆக அதிக மக்­கள்­தொகை உள்ள மாநி­ல­மான சிலாங்­கூர் ஆகி­யவை உட்­பட்ட கிள்­ளான் பள்­ளத்­தாக்கு பகு­தி­யிலேயே தொடர்ந்து கிரு­மித்­தொற்­றுச் சம்­ப­வங்­கள் பெரு­வா­ரி­யாக உள்­ளன. நேற்று இப்­ப­கு­தி­யில் மட்­டும் பதி­வான கொவிட்-19 சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை 10,500க்கும் மேலா­கும்.

கெடா மாநி­லத்­தி­லும் அதன் புதிய உச்­ச­மாக நேற்று 1,216 கொவிட்-19 சம்­ப­வங்­கள் பதி­வாகின. இவ்­வாண்டு மே மாதம் தொடங்­கிய நட­மாட்­டக் கட்­டுப்­பாடு­கள் மூன்­றா­வது மாத­மாக நடப்­பில் இருந்­தும் மலே­சி­யா­வின் கொவிட்-19 எண்­ணிக்கை தொடர்ந்து உயர்ந்­து­கொண்டே செல்­வது கவ­லைக்­கு­ரி­யது.

இதற்­கி­டையே, ஜூன் 1 முதல் மலே­சி­யா­வில் கடு­மை­யான முடக்­க­நிலை அம­லுக்கு வந்­தும் இந்­தியா­வில் முதன்­மு­த­லில் கண்­ட­றி­யப்­பட்ட உரு­மா­றிய டெல்டா கிருமி போன்­றவை, தொற்­றைப் பரப்­பும் சாத்­தியத்தை மேலும் அதி­க­மாக்­கி­யுள்­ளன என்று கூறப்­ப­டு­கிறது.

கிளந்­தான் மாநி­லத்­தில் கடந்த வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று முதல் டெல்டா உரு­மா­றிய கிரு­மித்­தொற்­றுச் சம்­ப­வம் கண்­ட­றி­யப்­பட்­டது. பாசிர் புத்தே பகு­தி­யைச் சேர்ந்த மாது ஒரு­வ­ரி­டம் டெல்டா கிருமி கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தாக ‘தி ஸ்டார்’ செய்தி நிறு­வ­னம் தெரி­வித்­தி­ருந்­தது.

அந்த மாது, ஏற்­கெ­னவே கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர் என்­றும் அந்த­மாநிலத்­தின் வீட­மைப்பு, சுகா­தார பணிக்­கு­ழுத் தலை­வர் இஸானி ஹுசின் நேற்று நடை­பெற்ற செய்தி­யா­ளர் கூட்­டத்­தில் கூறி­யி­ருந்­தார்.

“சமூ­கத்­தில் இந்த டெல்டா உரு­மா­றிய கிரு­மித்­தொற்று ஊடுருவி­விட்­டது என நான் நினைக்­கி­றேன். இது மிக­வும் கவலை தரும் ஒன்று,” என்­றார் அவர்.

இதற்­கி­டையே மலே­சி­யா­வில் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளும் விகி­த­மும் துரி­த­ம­டை­யத் தொடங்கி­உள்­ளது. தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளும் தகு­தி­யு­டைய பெரி­ய­வர்­களில் கிட்­டத்­தட்ட 50 விழுக்­காட்­டி­னர், நேற்று முன்தின நில­வ­ரப்­படி தங்­களின் முதல் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்­டுள்­ள­தாக அறி­யப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், கொவிட்-19க்கு எதி­ராக இரண்டு தடுப்­பூ­சி­க­ளை­யும் போட்­டுக்­கொண்­டோர், ஒரு சில சலு­கை­களை எதிர்­பார்க்­க­லாம் என்று பிர­த­மர் முகை­தீன் யாசின் நேற்று முன்­தி­னம் தெரி­வித்­தி­ருந்­தார். விளை­யாட்டு, சமூக நட­வடிக்­கை­க­ளு­டன் வீட்­டி­லேயே தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்­ளும் வாய்ப்­பும் ஏற்­ப­டுத்­தப்­படும் என்று கூறப்­பட்­டது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!