ஊழியர், வர்த்தக ஆதரவுக்கு $2 பி.

ஊழியர், வர்த்தக ஆதரவுக்கு $2 பி.

2 mins read

மே மாதம் முதல் கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் இருமுறை கடு­மை­யாக்­கப்­பட்­ட­தால் பாதிக்­கப்­படும் வர்த்­த­கங்­க­ளுக்­கும் ஊழி­யர்­

க­ளுக்­கும் உதவ $2 பில்­லி­ய­னுக்கு மேல் ஒதுக்­கப்­படும் என்று நிதி அமைச்­சர் லாரன்ஸ் வோங் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

ஆக அண்­மைய இரண்­டாம் கட்ட உயர் விழிப்­பு­நி­லைக் கட்­டுப்­பா­டு­கள் சிங்­கப்­பூ­ரின் பொரு­ளியல் மீட்­சியைச் சீர்குலைக்கும் என எதிர்­பார்க்­க­வில்லை என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

சவால்­க­ளுக்கு மத்­தி­யில் சிங்­கப்­பூ­ரின் பொரு­ளி­யல் இவ்­வாண்டு 4 முதல் 6 விழுக்­காடு வரை வளர்­வ­தற்­கான பாதை­யில் தொடர்ந்து சென்­று­கொண்­டி­ருக்­கும் அதே­நே­ரம் உணவு, பானத் துறை, சில்­லறை வர்த்­த­கம் போன்ற பய­னீட்­டா­ளர்­க­ளின் நேர­டித் தொடர்­பு­டைய துறை­கள் தொடர்ந்து சவால்­களை எதிர்­நோக்­கும் என்­றும் திரு வோங் தெரி­வித்­தார்.

நாடா­ளு­மன்­றத்­தில் துணை­நிலை ஒதுக்­கீட்டு மசோ­தாவை அறி­மு­கம் செய்­வ­தற்கு முன்­னர் இத்­த­க­வல்­களை அவர் விவ­ரித்­தார்.

புதி­தாக விதிக்­கப்­பட்ட கட்­டுப்­பா­டு­க­ளின் பாதிப்­பு­களைச் சரிக் கட்டும் நோக்கில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை உத­வித் தொகுப்பை நிதி அமைச்சு அறி­வித்­தது.

தகு­தி­யுள்ள உண­வங்­கா­டிக் கடை­க­ளுக்­கும் வர்த்­த­கங்­க­ளுக்­கும் வாடகை நிவா­ர­ணம், வேலை ஆத­ர­வுத் திட்­டத்­தின்­கீழ் மேம்­

ப­டுத்­தப்­பட்ட சம்­பள ஆத­ரவு உள்­ளிட்­டவை அந்­தத் தொகுப்­பில் இடம்­பெற்று இருந்­தன.

அவற்­றுக்கு $1.1 பில்­லி­ய­னுக்கு மேல் செல­வா­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டுகிறது. மறு­ஒ­துக்­கீடு மூலம் இதற்கு நிதி­ய­ளிக்­கப்­படும் என்று திரு வோங் தெரி­வித்­துள்­ளார்.

இத்­தொ­குப்­பின் பெருந்தொ­கை­யான $0.9 பில்­லி­யன் கொள்­ளை­நோய் நில­வ­ரத்­தால் ஏற்­பட்ட தாம­தம் கார­ண­மாக பயன்­ப­டுத்­தப்­ப­டாத நடை­முறை மற்­றும் மேம்­பாட்­டுச் செல­வு­க­ளி­லி­ருந்து பெறப்­படும். பள்ளி நட­வ­டிக்­கை­க­ளுக்­கும் மேம்­பாட்­டுத் திட்­டங்­க­ளுக்­கும் ஒரு­முறை ஒதுக்­கப்­படும் இந்­தத் தொகை அவை ஒத்­திப்­போ­டப்­பட்­ட­தா­லும் அல்­லது ரத்து செய்­யப்­பட்­ட­தா­லும் இத்­தொகை பயன்­பாட்­டுக்கு வர­வில்லை என்று விளக்­கி­னார் திரு வோங்.

"கடந்த ஆண்­டைக் காட்­டி­லும் தற்­போது நாம் வலு­வான நிலை­யில் இருப்­ப­தா­லும் பொரு­ளி­யல் நட­வ­டிக்­கை­கள் தொட­ரு­வ­தா­லும் நமது கடந்­த­கால நிதிக் கையி­ருப்­பில் இருந்து தொகையை எடுக்க வேண்­டிய அவ­சி­யம் ஏற்­ப­டாது என்று இதற்கு முன்­னர் கூறி­யி­ருந்­தேன். அதில் எந்த மாற்­ற­மும் இல்லை.

"உத­வித்­தொ­குப்­புக்­குத் தேவைப்­படும் நிதி மறு­ஒ­துக்­கீட்­டின் மூலம் வழங்­கப்­படும் என்­ப­தால் 2021 நிதி ஆண்­டுக்­கான ஒட்­டு­மொத்த நிதி நில­வ­ரத்­தில் எந்த மாற்­ற­மும் இராது என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. ஒட்­டு­மொத்த பற்­றாக்­குறை $11 பில்­லி­யன் அல்­லது மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­யில் 2.2 விழுக்­காடு என்­பது நீடிக்­கும்.

"பாதிக்­கப்­படும் துறை­க­ளைச் சேர்ந்த வர்த்­த­கங்­கள் மாறி மாறி அறி­விக்­கப்­படும் கட்டுப்பாடு­க­ளைக் கடைப்­பி­டிக்க மிக­வும் சிர­மப்­ப­டு­கின்­றன. குறிப்­பாக, அண்­மை­யில் கொவிட்-19 நில­வ­ரத்­தில் ஏற்­பட்­டி­ருக்­கும் தலை­கீழ் மாற்­றத்­தால் அவை பெரி­தும் ஏமாற்­ற­ம­டைந்து உள்­ளன.

"இருப்பினும் வர்த்தகத் தலை வர்களைச் சந்தித்துப் பேசியபோது கட்டுப்பாடுகளின் அவசியத்தை உணர்ந்திருப்பதாக அவர்கள் கூறி னர்," என்­றார் நிதி அமைச்­சர்.