அரசாங்கம் வழங்கும் இரு வார வாடகை நிவாரணத்துக்கு ஈடான உதவியை கடைகளுக்கு வழங்கவேண் டுமென தனியார் வர்த்தகக் கட்டட உரிமையாளர்களுக்கு அரசாங்கம் உத்தரவிட இருப்பதாக நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், "மே, ஜூன் மாதங்களில் இதேபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டபோது வாடகை நிவாரணத்தை நீட்டிக்குமாறு தனியார் கட்டட உரிமையாளர்களிடம் அரசாங்கம் வேண்டுகோள் வைத்தது.
"ஆனால், அவ்வாறு உதவி செய்ய ஒருசிலரைத் தவிர எல்லாரும் முன்வர வில்லை என பல கடைக் கார்கள், குறிப்பாக, பாதிக்கப்பட்ட உணவு, பான வர்த்தகம் மற்றும் சில்லறை வர்த்தகத் துறைகளைச் சேர்ந்தவர்கள் தெரிவித் திருந்தார்கள். எனவே, இம்முறை ஏராளமான வர்த்தகங்கள் சிரமங்களை எதிர்நோக்குவதால் அரசாங்கம் வழங்கும் இரு வாரத்திற்கான வாடகை நிவாரணத்தைப்போல தனியார் கட்டட உரிமையாளர்களும் இரு வார வாடகைக் கழிவை கடைகளுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட அரசாங்கம் எண்ணி உள்ளது," என்றார் திரு வோங். தற்போதைய கட்டுப்பாடுகள் நான்குவார காலம் நடப்பில் இருக்கும்.

