துஷ்பிரயோகம் காரணமாக குடிநுழைவு விண்ணப்பத்தில் ஒரு பகுதி நீக்கம்

துஷ்பிரயோகம் காரணமாக குடிநுழைவு விண்ணப்பத்தில் ஒரு பகுதி நீக்கம்

1 mins read

உள்­ளூர்­வா­சி­யின் பங்­கா­ளி­கா­ளி

­க­ளாக வியட்­னாம் நாட்­ட­வர் சிங்­கப்­பூ­ருக்­குள் நுழை­வ­தற்­கான குடி­நு­ழைவு விண்­ணப்­பத்­தில் 'ஆண் நண்­பர்/பெண் நண்­பர்' என்­னும் பகுதி தவ­றா­கப் பயன்­ப­டுத்­தப் பட்­ட­தால் கடந்த மார்ச் மாதம் அப்­ப­கு­தியை நீக்­க­வேண்­டிய நிலை ஏற்­பட்­ட­தாக சட்ட, உள்­துறை அமைச்­சர் கா.சண்­மு­கம் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

கேடிவி கிரு­மித்­தொற்­றுக் குழு­மம் கண்­ட­றி­யப்­பட்ட வேளை­யில் குறு­கி­ய­கால வரு­கை­யா­ளர் அட்­டை­யில் வியட்­னா­மி­லி­ருந்து வந்­தி­ருந்த பெண்­ணுக்கு முதன்­மு­த­லாக தொற்று உறுதி செய்­யப்­பட்­டது. அந்தப் ­பெண்ணை இங்கு வரவழைக்க 'ஆண் நண்­பர்/ பெண் நண்­பர்' என்­னும் பகுதி பயன்படுத்­தப்­பட்­டி­ருந்­தது.

பின்­னர் அது தவறான வழி­யில் பயன்­ப­டுத்­தப்­பட்­டது தெரி­ய­வந்­த­தும் அது­தொ­டர்­பாக குடி­நு­ழைவு சோத­னைச்சாவடி ஆணையம் விரை­வா­க­வும் சரி­யா­க­வும் செயல் பட்­ட­தாக அமைச்­சர் சண்முகம் குறிப்­பிட்­டார்.