கேலாங் பாருவில் இன்று காலை தீ மூண்டது. கேலாங் பாரு புளோக் 70ஏவின் இரண்டாவது மாடியிலுள்ள ஆடல் அரங்கம் ஒன்று இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. ஜாலன் பசார் நகர மன்றத்திற்கு அருகே இது இவ்வாறு நடந்துள்ளது.
தீயால் நகர மன்றம் பாதிக்கப்படவில்லை. அந்தக் கட்டடத்தின் இரண்டாவது மாடியில் தீச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு எவரும் காயம் அடைந்ததாக தகவல் வெளிவரவில்லை என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு தெரிவித்தது.
தீச்சம்பவம் காலை 6.35 மணிக்கு ஏற்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டது. அந்த இடத்தைச் சுற்றி தீயணைப்பாளர்கள் தண்ணீரைப் பாய்ச்சி அதனைப் பரவாமல் இருக்க தடுத்தனர். அந்தத் தீ கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்தில் அணைக்கப்பட்டது.

