சீனாவின் சைனோபார்ம் தடுப்பூசி, கூடிய விரைவில் சிங்கப்பூரில் கிடைக்கப்பெறும். இந்தத் தடுப்பூசிக்கான முன்பதிவை தனியார் சுகாதார குழுமங்கள் ஏற்கெனவே செய்துள்ளன.
இந்தத் தடுப்பூசி இந்நாட்டின் கிடைக்கப்பெறும் நான்காவது கொவிட்-19 தடுப்பூசியாக இருக்கப்போகிறது. சிறப்பு நுழைவுப்பாதை கட்டமைப்பின்கீழ் இந்தத் தடுப்பூசியை இறக்குமதி செய்து கொள்ள சுகாதார அறிவியல் ஆணையம் அனுமதி கொடுத்திருப்பதாக 'ஐஎச்எச் எல்த்கேர்' தனியார் சுகாதார நிறுவனம், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நிறுவனத்திடம் தெரிவித்தது. "தடுப்பூசிக்கான மற்றொரு தெரிவை இது சிங்கப்பூரில் உள்ளர்களுக்கு வழங்கும்" என்று கூறிய அந்நிறுவனத்தின் தலைமை செயலாக்க அதிகாரி டாக்டர் நொவல் இயோ, மேல் விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என்றார்.
இதற்கிடையே, இந்தச் சீனத் தடுப்பூசியைப் பெற ஆர்வமுள்ளோர் தங்களது விருப்பத்தைப் பதிவு செய்துகொள்ளும்படி ராஃபிள்ஸ் மருத்துவக் குழுமம் பேஸ்புக்கில் கேட்டுக்கொண்டது.

