புதிதாக 130 பேருக்கு சமூகத்தொற்று

புதிதாக 130 பேருக்கு சமூகத்தொற்று

1 mins read

சிங்­கப்­பூ­ரில் நேற்று உள்­ளூ­ரில் 130 பேருக்கு புதி­தாக கொவிட்-19 தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது. அவர்­களில் 27 பேர் ஜூரோங் மீன்­பி­டித் துறை­முக தொற்­றுக் குழு­மத்­து­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள். இவர்­க­ளை­யும் சேர்த்து அந்­தக் குழு­மத்­தில் பாதிக்­கப்­பட்டு இருப்­போ­ரின் எண்­ணிக்கை நேற்று நண்­பகல் நில­வ­ரப்­படி 929 ஆகக் கூடி­யது.

புதி­தாக கிருமி தொற்­றி­யோ­ரில் இருவருக்கு கேடிவி தொற்­றுக் குழுமத்­து­டன் தொடர்­புண்டு. இவர்­க­ளை­யும் சேர்த்து இந்­தக் குழு­மத்­தில் மொத்­தம் 247 பேர் பாதிக்­கப்­பட்டுள்ளனர்.

புதி­தாக கிருமி தொற்­றிய 130 பேரில் 61 பேர் முந்­தைய நோயா­ளி­களுடன் தொடர்­பு­டை­ய­வர்­கள்.

அவர்­கள் ஏற்­கெ­னவே தனித்து வைக்­கப்­பட்­ட­வர்­கள். தட­ம­றி­தல் மூலம் 21 பேருக்கு கிருமி தொற்றி இருந்­தது தெரி­ய­வந்­தது.

எஞ்­சிய 48 பேருக்கு தொற்று எப்படி ஏற்­பட்­டது என்­பது தெரி­ய­வில்லை.

புதி­தாக நேற்று கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­ன­வர்­கள் 136. அவர்­களில் ஆறு பேர் வெளி­நா­டு­களில் இருந்து வந்­த­வர்­கள் என்று சுகாதார அமைச்சு தெரி­ வித்­தது.