இரு புளோக்வாசிகளுக்கு கட்டாய கொவிட்-19 பரிசோதனை

இரு புளோக்வாசிகளுக்கு கட்டாய கொவிட்-19 பரிசோதனை

1 mins read
7e176955-d193-4d2d-9353-d9c1e8e2ed00
படம்: கூகல் வரைபடம் -

சுவா சூ காங், லேக்சைட் ஆகிய வட்டாரங்களில் உள்ள இரண்டு வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக்குகளில் வசிப்போருக்குக் கட்டாய கொவிட்-19 பரிசோதனை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

11 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதை அடுத்து, 3 டெக் வாய் அவென்யூ, 357 யுங் ஆன் சாலை ஆகிய இரண்டு புளோக்குகளின் குடியிருப்பாளர்கள் அனைவருக்கும் நாளை கொவிட்-19 பரிசோதனை நடத்தப்படும் என்று சுகாதார அமைச்சு இன்று தெரிவித்தது.

பரிசோதனைக்காக வரும் குடியிருப்பாளர்கள் தங்கள் அடையாள அட்டையைக் கொண்டுவர வேண்டும் என்றும் நேரத்துடன் வந்துவிட வேண்டும் என்று நினைவூட்டப்படுகின்றனர்.