129 பேருக்கு சமூகத்தொற்று

129 பேருக்கு சமூகத்தொற்று

1 mins read

சிங்கப்பூரில் நேற்று புதிதாக 129 பேருக்கு கொவிட்-19 சமூகத்தொற்று உறுதி யானது. அவர்களில் 30 பேர் ஜூரோங் மீன்பிடித் துறைமுக தொற்றுக் குழுமத்துடன் தொடர்புடைய வர்கள். இந்தக் குழுமத்தில் நேற்று நண்பகல் நிலவரப்படி மொத்தம் 962 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

புதிதாக கிருமி தொற்றியோரில் இருவர் கேடிவி குழுமத்துடன் தொடர்புடையவர்கள். இந்தக் குழுமத்தில் 249 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சமூகத்தொற்றுக்கு ஆளானோரில் 68 பேருக்கு முந்தைய நோயாளிகளுடன் தொடர்பு இருந்தது. 11 பேருக்குத் தடமறிதல் மூலம் தொற்று தெரிய வந்தது. எஞ்சிய 50 பேருக்கு தொற்று எப்படி ஏற்பட்டது என்பது தெரிய வில்லை. நேற்று மொத்தம் 133 பேர் பாதிக்கப்பட்டனர்.

அவர்களில் நால்வர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.