மலேசியா: மாமன்னர் ஏமாற்றம்; பதவி விலக பிரதமருக்கு அழுத்தம்

மலேசியா: மாமன்னர் ஏமாற்றம்; பதவி விலக பிரதமருக்கு அழுத்தம்

2 mins read
1c01ec35-f488-4bf2-b3e9-837ea9bf5278
மலேசிய பிரதமர் முகைதீன் யாசின். படம்: ஏஎஃப்பி -

மலே­சி­யா­வில் கொவிட்-19 தொற்று கார­ண­மாக நடப்­புக்கு வந்த அவ­ச­ர­நிலை பிர­க­ட­னத்தை அகற்­று­வ­தற்­குத்­ தான் சம்­ம­தம் தெரி­விக்­க­வில்லை என்று மாமன்­னர் அப்துல்லா அகம்­மது ஷா நேற்று அறி­வித்­தார்.

அர­ச­மைப்­புச் சட்ட நடை­மு­றை­களைப் பின்­பற்­றா­மல் அந்த உத்­தரவை அர­சாங்­கம் அகற்­றி­விட்­ட­தா­க­வும் இது மாமன்­ன­ருக்கு ஏமாற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­விட்­ட­தாக வும் அரண்­மனை அறிக்கை தெரிவித்தது.

இப்பிரச்­சினை நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று புய­லைக் கிளப்­பி­யது. கொவிட்-19 சூழல் கார­ணமாக நாட்­டில் ஜன­வரி முதல் ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை அவ­ச­ர­நிலைப் பிர­க­ட­னத்தை மாமன்­னர் அறி­வித்து இருந்­தார்.

அந்­தப் பிர­க­ட­னம் ஆகஸ்ட் 1ஆம் தேதிக்­குப் பிறகு நீட்­டிக்­கப்­படாது என்று மாமன்­ன­ரும் ஆட்சி­யா­ளர்­களும் அண்­மை­யில் தெளிவு­படுத்தி இருந்­த­னர்.

நாடா­ளு­மன்­றத்­தைக் கூட்டி அது பற்றி விவா­திக்­கும்­படி அவர்­கள் கேட்­டுக்­கொண்­டி­ருந்­த­னர்.

இருந்­தா­லும் கடந்த திங்­கட்­கிழமை மன்­றம் கூடி­ய­போது பிரதமர் முகைதீன் யாசி­ன் அரசாங்­ கம், மாமன்­ன­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் அதிர்ச்சி அடை யும் விதத்­தில் ஓர் அறி­விப்பை விடுத்தது.

அந்­தப் பிர­க­ட­னத்தை விவா­தத்­திற்கு எடுத்­துக்­கொள்­வ­தற்­குப் பதி­லாக அவ­ச­ர­கால பிர­க­ட­னத்தை ஜூலை 21ஆம் தேதி­யு­டன் முடித்­துக்­கொள்­வது என்று அமைச்­ச­ரவை முடிவு செய்­துள்­ள­தாக மன்றத்­தில் பர­ப­ரப்­பாக அறி­விக்­கப்­பட்டது.

இந்த அறி­விப்பு கார­ண­மாக நாடா­ளு­மன்ற கீழ­வை­யில், மாமன்னர் இதற்கு இணங்கி இருக்­கி­றாரா என்­ப­தைத் தெரிந்­து­கொள்ள உறுப்­பி­னர்­கள் பல­ரும் விரும்­பி­னர்.

இந்­நி­லை­யில், வெளி­யான அரண்­மனை அறிக்கை, அர­சாங்­கத்­தின் செயல்­பாட்­டில் மன்­ன­ருக்கு இணக்­கம் இல்லை என்று தெரி வித்­தது. அரண்­மனை அறிக்கை வெளி­யா­னதை அடுத்து நேற்று மன்­றத்­தில் கூச்­சல் கிளம்­பி­யது.

அரசாங்கத்திற்கு எதிராக எதிர்த்­தரப்­பி­ன­ர் பலத்த குரல் எழுப்­பி­னர். பிர­த­மர் முகைதீன், சட்டம் மற்றும் நாடா­ளு­மன்ற விவ­கார அமைச்­சர் தக்­யு­தின் ஹாசன் இரு­வரும் உடனே பதவி விலக வேண்டும் என்று எதிர்­த்தரப்பு தலை­வர் அன்­வார் இப்­ரா­கிம் கோரிக்கை விடுத்­தார். அப்­போது அந்த இரு­வரும் மன்­றத்­தில் இல்லை.

இந்­நி­லை­யில், அமைச்­ச­ர­வை­யில் உள்ள தனது அணுக்க ஆலோ­சகர்­கள், தலை­மைச் சட்ட அதி­காரி ஆகி­யோ­ரு­டன் பிர­த­மர் முகைதீன் யாசின் நேற்று ஆலோ­சனை நடத்­தி­ய­தாக தக­வல்­கள் தெரி­வித்­தன.

சூழ்­நிலை பற்றி பிர­த­ம­ருக்கு எடுத்­துக் கூறப்­பட்­ட­தாக தக­வல் அறிந்த வட்­டா­ரத்தை மேற்­கோள் காட்டி ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரி­வித்­தது.

பிரதமர் பதவியில் இருந்து வில­கும்­படி ஆளும் கூட்­டணி­யில் இடம்­பெற்­றுள்ள கட்­சி­யி­னர் முகைதீனுக்கு அறி­வு­ரை­ கூறி இருப்­ப­தாகவும் தெரி­ய­வந்­தது.

கீழ­றுப்­புச் செய­லில் பிர­த­மர் ஈடு­பட்டு இருப்­ப­தா­க­வும் அவர் உடனே பதவி விலக வேண்­டும் என்­றும் அம்னோ இளை­யர் பிரிவு வலி­யு­றுத்தி இருக்­கிறது.