சிங்கப்பூரில் புதிதாக 131 பேருக்குப் புதிதாக கிருமித்தொற்று பதிவாகியுள்ளது. இவர்களில் 28 பேர் ஜூரோங் மீன் வர்த்தகத் துறைமுகத் தொற்றுக் குழுமத்தைச் சேர்ந்தவர்கள்.
இவர்களுடன் மொத்த எண்ணிக்கை 997ஆக உயர்ந்துள்ளது.
கேடிவி குழுமத்துடன் ஒரு கிருமித்தொற்று தொடர்புடையதாக உள்ளது.இதனுடன் அக்குழுமத்தின் மொத்த கிருமித்தொற்றுகளின் எண்ணிக்கை 249க்கு உயர்ந்துள்ளது.
உள்ளூரில் பரவிய 131 கிருமித்தொற்றுச் சம்பவங்களில் 64, முன்னைய சம்பவங்களுடன் தொடர்புடையவை. மேலும் 15 பேர் கண்காணிக்கப்பட்டன. எஞ்சிய 52 பேர், தொடர்பில்லாத புதிய சம்பவங்கள்.
உள்ளூரிலேயே பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் 70 வயதுக்கும் மேற்பட்ட முதியவர். அவர் கடுமையாக நோய்வாய்ப்படும் அபாயத்தை எதிர்நோக்குகிறார்.

