சமூகத்தில் புதிதாக 131 பேருக்கு கொவிட்-19 தொற்று

சமூகத்தில் புதிதாக 131 பேருக்கு கொவிட்-19 தொற்று

1 mins read

சிங்­கப்­பூ­ரில் நேற்று புதி­தாக 131 பேருக்கு கொவிட்-19 சமூ­கத்­தொற்று உறு­தி­யா­னது. அவர்­களில் 28 பேர் ஜூரோங் மீன்­பி­டித் துறை­முக தொற்­றுக் குழு­மத்­து­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள் என்று சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

அந்­தக் குழு­மத்­தில் மொத்­தம் 997 பேர் பாதிக்­கப்­பட்டுள்ளனர்.

புதி­தாக நேற்று சமூ­கத்­தொற்றுக்கு ஆளா­ன­வர்­களில் ஒருவர் கேடிவி தொற்­றுக் குழு­மத்­து­டன் தொடர்­பு­டை­ய­வர். இந்­தக் குழு­மத்­தில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை 249 ஆகக் கூடி இருக்­கிறது.

சமூ­கத்­தொற்­றுக்கு ஆளா­ன­வர்­களில் 64 பேர் முந்­தைய கொவிட்-19 நோயா­ளி­க­ளு­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள். அவர்­கள் ஏற்­கெ­னவே தனி­மைப்படுத்­தப்­பட்­ட­வர்­கள்.

தட­ம­றி­தல் மூலம் 15 பேருக்கு கிரு­மித்­தொற்று கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. எஞ்­சிய 52 பேருக்­கும் தொற்று எப்­படி ஏற்­பட்­டது என்­பது தெரி­ய­வில்லை.

சமூ­கத்­தொற்­றுக்கு ஆளா­ன­வர்­களில் ஒரு­வர் 70 வய­துக்­கும் மேற்­பட்ட முதி­ய­வர். அவர் முத­லா­வது தடுப்­பூ­சி­யை மட்டும் போட்டுக் கொண்டவர்.

வெளி­நாட்­டில் இருந்து வந்த எட்டு பேருக்­கும் நேற்று தொற்று இருந்­தது தெரி­ய­வந்­தது. சிங்­கப்­பூ­ருக்கு வந்­த­போது அவர்­க­ளுக்கு தனிமை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­ட­தாக அமைச்சு தெரி­வித்­தது.

சிங்­கப்­பூ­ரில் நேற்­றைய பிற்­ப­கல் நில­வ­ரப்­படி கொரோனா தொற்று பாதிப்­புக்கு ஆளா­ன­வர்­க­ளின் மொத்த எண்­ணிக்கை 64,861 ஆக இருந்­தது.