டெல்டா கிருமியை ஒழிக்க உலகம் மும்முரம்

டெல்டா கிருமியை ஒழிக்க உலகம் மும்முரம்

2 mins read

உல­கில் உரு­மா­றிய கொவிட்-19 டெல்டா கிரு­மியைத் துடைத்­தொழிக்க பல நாடு­களும் முயற்­சி­களை முடுக்­கி­விட்டு உள்­ளன. அமெ­ரிக்­கா­வில் தடுப்­பூ­சி போட்டுக் கொள்­வோ­ருக்கு புதிய ஊக்­கு­விப்­பு­களை அந்த நாட்டு அதி­பர் அறி­வித்து இருக்­கி­றார்.

இஸ்­ரேல், தன் மக்­க­ளுக்கு குறிப்­பாக 60 வய­தைக் கடந்­த­வர்­க­ளுக்கு நோய்த் தடுப்­பாற்­றலை அதி­க­ரிக்­கும் மூன்­றா­வது தடுப்­பூசி மருந்தை அங்­கீ­க­ரித்து இருக்­கிறது.

மொரோ­க்கோ­வில் இருந்து பாகிஸ்­தான் வரைப்­பட்ட கிழக்கு பூமி நில நடுக்­கோட்டு பகு­தி­யில் நான்­கா­வது அலை ஏற்­ப­டக்­கூ­டும் என்று உலக சுகா­தார நிறு­வ­னம் எச்­ச­ரித்து உள்­ளது.

அந்த நாடு­களில் தடுப்­பூசி இயக்­கம் மெது­வாக இருப்­ப­தால் கிருமி அதி­க­மா­கப் பர­வும் ஆபத்து இருப்­ப­தாக வல்­லு­நர்­களும் தலை­வர்­களும் அபாயச் சங்கு ஊதி இருக்­கி­றார்­கள்.

தமிழ்நாட்டில் ஏறுமுகம்

இந்­நி­லை­யில், உல­கில் கொவிட்-19 தொற்­றில் இரண்­டா­வது இடத்­தில் இருக்­கும் இந்­தி­யா­வில், இப்­போ­தைய 2­வது அலை 3­வது அலை­யாக உரு­மா­றும் ஆபத்துள்ளதா­கக் கூறப்­ப­டு­கிறது.

இந்­தி­யா­வில் வியா­ழக்­கி­ழமை 44,681 பேருக்கு புதி­தாக தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­ட­தாக நேற்று அதி­கா­ர­பூர்வ புள்­ளி­வி­வ­ரங்­கள் தெரி­வித்­தன. அவர்­களில் 22,064 பேர் கேர­ளா­வைச் சேர்ந்­த­வர்­கள். அன்று 555 பேர் மாண்­டு­விட்­ட­னர்.

இந்­நி­லை­யில், பக்­கத்து மாநி­லங்­க­ளான கர்­நா­ட­கா­வி­லும் தமிழ்­நாட்­டி­லும் பல நாட்­க­ளாக குறைந்து வந்த தொற்று வியா­ழக்­கி­ழமை திடீ­ரென அதி­க­ரித்­து­விட்­ட­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

கர்­நா­ட­கா­வில் புதன்­கி­ழமை புதி­தாக 1,531 பேருக்கு தொற்று ஏற்­பட்­டது. வியா­ழக்­கி­ழமை இந்த எண்­ணிக்கை 2,052 ஆகியது.

அதே­வே­ளை­யில், தமிழ்­நாட்­டில் ஏறத்­தாழ 69 நாட்­க­ளுக்­குப் பிறகு வியா­ழக்­கி­ழமை புதி­தாக கிருமி தொற்­றி­யோ­ரின் எண்­ணிக்கை புதன்­கி­ழ­மை­யை­விட அதி­க­மாக இருந்­ததாக அதி­கா­ரி­கள் கூறினர்.

புதன்­கி­ழமை 1,756 பேர் பாதிக்­கப்­பட்­ட­னர். இந்த எண்­ணிக்கை வியா­ழக்­கி­ழமை 1,859 ஆகி­யது.

மகா­ராஷ்­டி­ரா­வில் ஏழு நாட்­களுக்­குப் பிறகு புதிய தொற்று எண்­ணிக்கை 7,000ஐ கடந்­தது.

இந்­தி­யா­வில் மத்­திய, மாநில அர­சாங்­கங்­கள் கிரு­மியைக் கட்டுப்­ப­டுத்த தடுப்­பூசி உள்­ளிட்ட பல்­வேறு முயற்­சி­க­ளை­யும் தீவிர மாக எடுத்து வரு­கின்­றன.