50 இரவு விடுதிகள் செயல்படத் தடை

50 இரவு விடுதிகள் செயல்படத் தடை

3 mins read

கடந்த அக்­டோ­பர் மாதத்­தி­லி­ருந்து கொவிட்-19 விதி­மு­றை­களை மீறிய ஏறத்­தாழ 50 இரவு விடு­தி­கள் மீண்­டும் செயல்­ப­டத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

உணவு, பான கடை­க­ளா­கச் செயல்­ப­டத் தொடங்­கிய மற்ற விடு­தி­கள் பல்­வேறு பரி­சோ­த­னை­களில் தேர்ச்சி பெற்று நிபந்­த­னை­யு­டன் கூடிய அனு

­ம­தி­யைப் பெற்­றால்­தான் செயல்­பட அனு­ம­திக்­கப்­படும் என்று அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

கேடிவி கூடங்க­ளி­லும் இரவு விடு­தி­க­ளி­லும் தொற்­றுக் குழு­மம் ஏற்­பட்­டதை அடுத்து, அவற்­றின் மூலம் சமூ­கத்­தில் கிருமி பரவுவதைத் தடுக்­கும் வகை­யில் ஜூலை 16 முதல் இரண்டு வார காலம் இத்­த­கைய விடு­தி­கள் செயல்­ப­டத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

கேடிவி, இர­வு­ வி­டு­தி­கள் தொடர்­பான கொவிட்-19 குழு­மங்­களில் ஏறத்­தாழ 250 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

மீண்­டும் செயல்­பட அனு­மதி வழங்­கப்­பட்­டால் ஏற்­கெ­னவே நடை­மு­றை­ப­டுத்­தப்­பட்­டுள்ள முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­க­ளு­டன் கூடு­தல் பாது­காப்பு நட­வ­டிக்­கை­க­ளை­யும் சம்­பந்­தப்­பட்ட இரவு விடு­தி­கள் கடைப்­பி­டிக்க வேண்­டும் என்று நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற அமைச்சு, வர்த்­தக தொழில் அமைச்சு, உள்­துறை அமைச்சு ஆகி­யவை நேற்று கூட்­ட­றிக்­கை­யில் தெரி­வித்­தன.

தனி அறை­களை எல்­லாம் மூடி­விட வேண்­டும் என்­றும் உணவு, பானச் சேவைக்கு பிர­தான இடம் ஒன்றை மட்­டும் பயன்­ப­டுத்த வேண்­டும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

விடு­தி­களில் வழங்­கப்­படும் சேவை­கள் அனைத்­தும் தெரி­யும்­படி கண்­கா­ணிப்பு கேம­ராக்­கள் பொருத்­தப்­பட வேண்­டும் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பூட்­டப்­பட்ட தனி அறை­க­ளின் வாசல்­க­ளைக் காட்­டும் வகை­யில் கண்­கா­ணிப்பு கேம­ராக்­கள் பொருத்­தப்­பட வேண்­டும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

விடு­திக்­குள் என்ன நட­க்­கிறது என்­பதை வெளி­யி­லி­ருந்து பார்க்க முடி­யும் அள­வுக்கு இருக்க வேண்­டும் என்று நிபந்­தனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

பொழு­து­போக்கு அம்­சங் களுக்­கா­கப் பயன்­ப­டுத்­தப்­படும் சாத­னங்­கள் அகற்­றப்­பட வேண்­டும் என்று இரவு விடுதிகளுக்­குச் செல்­லும் வாடிக்கையாளர்­கள் அவற்­றைப் பயன்படுத்­தக்­கூ­டாது என்று தெரிவிக்­கப்­பட்­டது.

இரவு விடு­தி­கள் மீண்­டும் செயல்­ப­டத் தொடங்­கு­வ­தற்கு முன், அவற்­றின் ஊழி­யர்­கள் அனை­வ­ரும் ஒரு­முறை கொவிட்-19 பரி­சோ­த­னை­யைச் செய்­து­கொள்ள வேண்­டும்.

அதை­ய­டுத்து, விடு­தி­கள் செயல்­ப­டத் தொடங்­கி­ய­தும் ஒவ்­வொரு வார­மும் சுகா­தார மேம்­பாட்­டு வாரியத்தின் விரை­வுச் சோதனை நிலை­யத்­துக்­குச் சென்று அங்கு கொவிட்-19 பரி­சோ­த­னையை அவர்­கள் செய்­து­கொள்ள வேண்­டும்.

இது உணவு, பானக் கடை­

க­ளின் ஊழி­யர்­க­ளுக்கு விதிக்­கப்­பட்ட விதி­மு­றை­க­ளை­விட கடு­மை­யா­னவை.

உணவு, பானக் கடை­க­ளின் ஊழி­யர்­கள் இரண்டு வாரங்­க­ளுக்கு ஒரு­முறை அத்­த­கைய பரி­சோ­த­னை­யைச் செய்­து ­கொள்ள வேண்­டும்.

இரவு விடு­தி­க­ளின் நுழை­

வா­யி­லில் பணி­பு­ரி­யும் ஊழி­யர்­கள் சோதனை நடத்த வரும் அதி­காரி­கள் உடனே உள்ள செல்ல அனு­ம­திக்க வேண்­டும்.

அதி­கா­ரி­க­ளுக்கு அவர்­கள் எவ்­வித இடை­யூ­றும் விளை­விக்­கக்­கூ­டாது.

விடு­தி­க­ளுக்­குள் என்ன நடக்­கிறது என்­பதை பார்க்க விரும்­பும் பொது­மக்­க­ளை­யும் அவர்­கள் தடுக்­கக்­கூ­டாது.

வர்த்­தக, தொழில் அமைச்­சி­ட­மி­ருந்து அனு­மதி பெறா­மல் மீண்­டும் செயல்­ப­டத் தொடங்­கும் இரவு விடு­தி­க­ளுக்கு எதி­ரா­கக் கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று அதி­கா­ரி­கள் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ள­னர்.

அவ்வாறு செய்யும் இரவு விடுதிகளின் உணவு விற்பனை, பொழுதுபோக்கு அம்சங்கள், மதுபான விற்பனை உரிமங்கள் ரத்து செய்யப்படும்.

உரிமங்கள் ரத்து செய்யப்பட்டு விடுதிகள் உடனடியாக மூட உத்தரவிடப்படும்.

இதுவரை ஏழு இரவு விடுதிகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவை செயல்படத் தடை விதிக்கப் பட்டுள்ளன.

நியூ பிரிட்ஜ் சாலையில் உள்ள பியோனி கார்டன் ஃபுட் ஹவுஸ், லக்கி பிளாசாவில் உள்ள 3 கிங்ஸ் பப், பீச் சாலையில் உள்ள டிமேக்ஸ், சவுத் பிரிட்ஜ் சாலையில் உள்ள தி சார்ம், சிலிகி சாலையில் உள்ள ஐகோன் II ஆகியவை அவற்றில் அடங்கும்.