முகைதீன் பதவி விலகக் கோரி கோலாலம்பூரில் ஆர்ப்பாட்டம்

முகைதீன் பதவி விலகக் கோரி கோலாலம்பூரில் ஆர்ப்பாட்டம்

2 mins read
3fa33e2b-77b8-48e2-ad63-7d5ab8322985
கோலாலம்பூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்: படம்: இபிஏ -

மலே­சி­யப் பிர­த­மர் முகை­தீன் யாசி­னுக்கு எதி­ராக மலே­சி­யத் தலை­

ந­கர் கோலா­லம்­பூ­ரின் மையப் பகு­தி­யில் நேற்று நூற்­றுக்­க­ணக்­கா­னோர் ஆர்ப்­பாட்­டம் நடத்­தி­னர்.

பிர­த­மர் முகை­தீ­னைப் பதவி வில­கக் கூறி ஏறத்தாழ 400 பேர் பதா­கை­களை ஏந்­திக்­கொண்டு முழக்­க­மிட்­ட­னர்.

கறுப்­பு ஆ­டை­ அணிந்த ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் மெர்­டேக்கா சதுக்­கத்­துக்­குள் நுழைந்­து­வி­டா­தி­ருக்க அவ்­வி­டத்­தைச் சுற்­றி­யுள்ள சாலை­களில் தடுப்­பு­கள் வைக்­கப்­பட்­டன.

ஆர்ப்­பாட்­டத்­துக்­குப் பல்­வேறு இளை­யர், சமூக அமைப்­பு­க­ளின் கூட்­ட­ணி­யான மக்­கள் ஒரு­மைப்­பாட்டுச் செய­ல­கம் ஏற்­பாடு செய்­தது. மலே­சி­யா­வில் கொவிட்-19 மர­ணங்­கள் அதி­க­ரித்து வரும் நிலை­யில், அது­கு­றித்து தங்­கள் அதி­ருப்­தி­யைக் காட்ட உரு­வப்­பொம்­மை­க­ளைப் பிணங்­க­ளைப் போல வடி­வ­மைத்து ஆர்ப்­பாட்­டம் நடத்­தப்­பட்­டது. பிர­த­மர் முகை­தீ­னின் தலை­மை­யின்­கீழ் செயல்­படும் அர­சாங்­கம், கொவிட்-19 நெருக்­க­டி­நி­லையை சரி­யான வகை­யில் எதிர்­கொள்­ளத் தவ­றி­விட்­டது என்று ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் குரல் எழுப்­பி­னர். நாடாளுமன்றம் மீண்டும் கூட வேண்டும் என்றும் அது வழக்கம்போல செயல்பட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கமிட்டனர்.

கொவிட்-19 நெருக்­க­டி­நி­லை­யால் மலே­சி­யர்­கள் பல­ருக்கு நிதிச் சுமை ஏற்­பட்­டுள்­ள­தா­க­வும் வங்­கி­

க­ளி­ட­மி­ருந்து வாங்­கிய கடன்­

க­ளைக் காலம் தாழ்த்தி அடைக்க அர­சாங்­கம் தேவை­யான நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்­டும் எனவும் ஆர்ப்­பாட்­டத்­தின்­போது கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டது.

ஆர்ப்­பாட்­டம் நடை­பெற்ற இடத்­தில் போக்­கு­வ­ரத்து போலி­சா­ரும் சாதா­ர­ண உடை­யில் இருந்த போலிஸ் அதி­கா­ரி­களும் பணி­யில் ஈடுப்­பட்­ட­தாக தி ஸ்டார் நாளி­தழ் தெரி­வித்­தது. ஆர்ப்­பாட்­டம் என்ற பேரில் கொவிட்-19 விதி­மு­றை­களை மீறு­வோ­ருக்கு எதி­ரா­கக் கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று கோலா­லம்­பூர் போலிஸ் படைத் தலை­வர் அஸ்மி அபு காசிம் எச்­ச­ரிக்கை விடுத்­தி­ருந்­தார்.

ஆர்ப்­பாட்­டம் நடத்த அனு­மதி கேட்டு எந்த ஓர் அமைப்­பும் விண்­ணப்­பக் செய்­ய­வில்லை என்­றார் அவர். ஆர்ப்­பாட்­டத்­துக்கு ஏற்­பாடு செய்­தி­ருந்­த­வர்­கள் விசா­ர­ணைக்கு அழைக்­கப்­ப­டு­வர் என்று கோலா­லம்­பூர் போலிஸ் படை கூறி­யது. ஆர்ப்­பாட்­டத்­துக்­குப் பிறகு ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் அமை­தி­யான முறை­யில் கலைந்து சென்­ற­தாக தெரி­விக்­கப்­பட்­டது.