நேற்றைய நிலவரப்படி சமூக
அளவில் மேலும் 117 பேருக்கு கொவிட்-19 கிருமி பரவியுள்ளது.
அவர்களில் 26 பேர் ஜூரோங் மீன்பிடித் துறைமுக கொவிட்-19 குழுமத்துடன் தொடர்புடையவர்கள்.
இதன்மூலம் அக்குழுமத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,025ஆக அதிகரித்துள்ளது.
கேடிவி குழுமத்துடன் தொடர்புடைய மேலும் ஒருவருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.
கேடிவி குழுமத்தில் இதுவரை 251 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சமூக அளவில் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ள 117 பேரில் 67 பேர் கொரோனாவால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில் இருந்தவர்கள்.
அவர்கள் அனைவரும் முன்னதாகவே தனிமைப்படுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
கண்காணிப்பு மூலம் எட்டு பேருக்கு கிருமித்தொற்று இருப்பது தெரியவந்தது.
மீதமுள்ள 42 பேருக்கும் ஏற்கெனவே பாதிக்கப்பட்டோருக்கும் இடையே எவ்வித தொடர்பும் இல்லை.
இதற்கிடையே, வெளிநாடுகளிலிருந்து வந்த மூவருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

