கூடுதல் நிதியுதவிக்கு வழிவகை

3 mins read

கொவிட்-19 தொற்றால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட குறைந்த வருமானக் குடும்பங்கள்

கொவிட்-19 தொற்றால் நேர­டி­யாகப் பாதிக்­கப்­பட்ட குறைந்த வரு­மா­னக் குடும்­பங்­க­ளுக்­குத் 'துணி­க­ரத் திட்­டங்­க­ளுக்­கான நிதி'யின்­கீழ் கூடு­தல் நிதி­யா­த­ரவு கிடைக்­கும்.

கொவிட்-19 தொற்­றால் பாதிக்­கப்­ப­டு­முன் ஈட்­டி­ய­தற்­குப் பதி­லாக இப்­போ­தைய வரு­மா­னத்தை மதிப்­பி­டும் வகை­யில் தகுதி விதி­கள் தளர்த்­தப்­பட்­டுள்­ள­தால் 'துணி­கரத் திட்­டங்­க­ளுக்­கான நிதி'யின்­கீழ் உதவி பெற அதி­க­மான குடும்­பங்­கள் தகு­தி­பெ­றும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இப்­போது அந்­நி­தி­யின்­கீழ், கொரோனா தொற்­றால் நேர­டி­யாகப் பாதிக்­கப்­பட்ட குறைந்த வரு­மா­னக் குடும்­பங்­க­ளுக்கு உத­வும் வித­மாக ஒரு­முறை மட்­டும் $1,000 வரை வழங்­கப்­பட்டு வரு­கிறது.

அதன்­படி, கொரோனா தொற்­றால் பாதிக்­கப்­பட்ட அல்­லது தனி­மைப்­ப­டுத்­தப்­பட்ட அல்­லது வீட்­டில் தங்­கும் உத்­த­ர­வின்­கீழ் அல்­லது கட்­டாய விடுப்­பில் இருந்த குடும்ப உறுப்­பி­ன­ரைக் கொண்­டுள்ள குடும்­பங்­க­ளுக்கு அந்த உதவி வழங்­கப்­ப­டு­கிறது.

சென்ற மாதம் 13ஆம் தேதி­வரை, கிட்­டத்­தட்ட 2,300 குடும்­பங்­கள் அந்த நிதி­யா­த­ர­வைப் பெற்­றன.

கொரோனா தொற்­றால் ஒன்­றுக்கு மேற்­பட்ட முறை பாதிக்­கப்­பட்டு, வேலை, வரு­மான இழப்­பைத் தொடர்ந்து எதிர்­கொள்­ளும் குடும்­பங்­கள் இரு­முறை நிதி­யு­தவி பெற இய­லும் என்று சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சும் தேசிய சமூக சேவை மன்­ற­மும் தெரி­வித்­தன.

குடும்­பத்­தின் இப்­போ­தைய மொத்த மாத வரு­மா­னம் $6,200 அல்­லது அதற்­கும் குறை­வாக, அல்­லது குடும்­பத்­தின் மாதாந்­திர தனி­ந­பர் சரா­சரி வரு­மா­னம் $2,000 அல்­லது அதற்­கும் குறை­வாக இருக்­கும் குடும்­பங்­கள், மற்ற தகுதி விதி­க­ளை­யும் பூர்த்தி செய்­தால், நிதி­யு­த­விக்­குத் தகு­தி­பெ­றும்.

"கொவிட்-19 தொற்­றின் தாக்­கம் நீடிக்­கும் நிலை­யில், சில குடும்­பங்­கள் ஒரு­மு­றைக்கு மேல் தனி­மைப்­ப­டுத்­தல் உத்­த­ரவு அல்­லது வீட்­டில் தங்­கும் உத்­த­ரவை நிறை­வேற்ற வேண்டி அல்­லது கட்­டாய விடுப்­பில் இருந்­தி­ருக்­க­லாம் என்­பதை அறிந்­துள்­ளோம். கொரோனா தொற்றிவிடுமோ என்ற அச்­சத்­து­டன் வரு­மான இழப்பு குறித்த கவ­லை­யும் குறைந்த வரு­மா­னக் குடும்­பங்­களைக் கடு­மை­யா­கப் பாதித்து இருக்­க­லாம்," என்று சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சர் மச­கோஸ் ஸுல்­கி­ஃப்லி கூறி­னார்.

இந்­நி­லை­யில், துணி­க­ரத் திட்­டங்­க­ளுக்­கான நிதி­யின்­கீழ் உதவி கிடைப்­ப­தற்­குச் செய்­யப்­பட்­டுள்ள மாற்­றங்­கள், அந்­தக் குடும்­பங்­கள் மீண்­டும் விரை­வில் சொந்­த­மா­கக் காலூன்ற உத­வும் என்­றும் அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

கடந்த 2003ஆம் ஆண்­டில் சார்ஸ் தொற்­றால் சிங்­கப்­பூர் பாதிக்­கப்­பட்­ட­போது துணி­க­ரத் திட்­டங்­க­ளுக்­கான நிதி ஏற்­ப­டுத்­தப்­பட்­டது.

சென்ற மாதம் 13ஆம் தேதி­வரை, கொரோனா தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோர்க்கு உத­வு­வ­தற்­காக அந்­நி­திக்கு சமூ­கத்­தி­டம் இருந்து $18.4 மில்­லி­யன் நன்­கொடை திரட்­டப்­பட்­டது. அதில் கிட்­டத்­தட்ட $2.7 மில்­லி­யன், 2,500க்கும் மேற்­பட்ட பய­னா­ளி­களுக்கு வழங்­கப்­பட்­டது.

தகுதி விதி­களை நிறை­வேற்­றும் பட்­சத்­தில், 'காம்­கேர்', கொவிட்-19 மீட்சி மானி­யம் போன்­ற­வற்­றின் பய­னா­ளி­க­ளும் துணி­க­ரத் திட்­டங்­க­ளுக்­கான நிதி­யின்­கீழ் கூடு­தல் உதவி கோரி விண்­ணப்­பிக்­க­லாம். அவ்­வாறு உத­வி­கோ­ரும் குடும்­பங்­களில் ஒரு­வ­ரே­னும் சிங்­கப்­பூ­ர­ராக அல்­லது நிரந்­த­ர­வா­சி­யாக இருக்க வேண்­டும்.

துணி­க­ரத் திட்­டங்­க­ளுக்­கான நிதி­யின்­கீழ் உத­வி­கோர விரும்­பும் குடும்­பங்­கள் https://go/gov.sg/tcf என்ற இணை­யப்­பக்­கம் வழி­யாக விண்­ணப்­பிக்­க­லாம்.

விண்­ணப்­பங்­க­ளைப் பூர்த்தி செய்ய உதவி தேவைப்­ப­டு­வோர் 1800-222-0000 என்ற நேர­டித் தொலை­பேசி எண் வழி­யாக காம்­கேர் அமைப்பை அழைக்­க­லாம் அல்­லது sk_SSO@msf.gov.sg என்ற முக­வ­ரிக்கு மின்­னஞ்­சல் அனுப்­ப­லாம் அல்­லது அரு­கில்­உள்ள சமூக சேவை அலு­வ­ல­கத்தை நாட­லாம்.