உலகத் தொற்று 200 மில்லியன் கொவிட்-19: உலக மக்களில் 2.6% பாதிப்பு; டெல்டா கிருமி வேகமாகப் பரவுவதாக அபாயச் சங்கு

உல­கம் முழு­வ­தும் கொவிட்-19 கிருமி தொற்­றி­யோ­ரின் எண்­ணிக்கை புதன்­கிழமை 200 மில்­லி­யனைக் கடந்­து­விட்­டது என்று ராய்ட்­டர்ஸ் செய்தி நிறு­வ­னம் தெரி­விக்­கிறது.

தடுப்­பூசி இயக்­கம் வேக­ம­டை­யாத, சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு வச­தி­க­ள் சரியில்லாத பகு­தி­களில் டெல்டா கிருமி பெரும் மிரட்­ட­லாக உரு­வெ­டுக்­கிறது என்­றும் அபாயச்­சங்கு ஊதப்­பட்டு இருக்­கிறது.

உல­கம் எங்­கும் கொவிட்-19 தொற்று கூடி வரு­கிறது. இது ஏழை, பணக்­கார நாடு­க­ளுக்கு இடை­யில் தடுப்­பூசி இயக்­கத்­தில் அதி­க­ரிக்­கும் ஏற்­றத்­தாழ்வை எடுத்­துக்­காட்­டு­கிறது.

உல­கில் மூன்­றில் ஒரு பங்கு நாடு­களில் கொவிட்-19 தொற்று அதி­க­ரிக்­கிறது. அவற்­றில் பல நாடு­களும் தங்­கள் மக்­களில் பாதிப்­பே­ருக்­குக் கூட இன்­ன­மும் முதல் ஊசி­யைப் போட­வில்லை.

ஒவ்­வொரு நாட்­டி­லும் மக்­கள்­தொ­கை­யில் குறைந்­த­பட்­சம் 10 விழுக்­காட்­டி­னருக்குத் தடுப்­பூசி போடப்­படும் வரை கொவிட்-19 எதிர்ப்­பு­ச்சக்தி ஊக்க மருந்து இயக்­கத்தைத் தற்­கா­லி­க­மாக நிறுத்தி வைக்க வேண்­டும் என்று உலக சுகாதார நிறு­வ­னம் கோரிக்கை விடுத்துள்­ளது.

அதிக வரு­மா­னம் உள்ள நாடு­களுக்குச் செல்­லும் தடுப்பூசி மருந்தை குறைந்த வரு­மான நாடு­க­ளுக்கு உட­னடி­யா­கத் திருப்பி­விட வேண்­டும் என்று இந்த நிறு­வ­னத்­தின் தலைமை இயக்­குநர் கோரிக்கை விடுத்­தார். கொரோனா தலை­காட்­டி­யது முதல் உலக மக்­களில் குறைந்­த­பட்­சம் 2.6 விழுக்காட்டினருக்குத் தொற்று ஏற்­பட்டுள்ளது. ஆனால் உண்­மை­யான எண்­ணிக்கை இன்­னும் அதி­க­மாக இருக்­கும் என்று கணிக்­கப்­ப­டு­கிறது.

தொற்று தலை­காட்­டி­ய முதல் ஓராண்­டிற்­குப் பிற­கு­தான் 100 மில்­லி­யன் பேர் பாதிக்­கப்­பட்­ட­னர். ஆனால் அடுத்த ஆறு மாதத்­திற்­குள்­ளா­கவே மேலும் 100 மில்­லி­யன் பேர் பாதிக்­கப்­பட்டு உள்­ள­னர் என்று பகுப்­பாய்­வு­கள் தெரி­விக்­கின்­றன.

கொவிட்-19 கார­ண­மாக உல­கம் முழு­வ­தும் 4.4 மில்­லி­யன் பேர் மாண்டு விட்டனர். அமெ­ரிக்கா, பிரே­சில், இந்­தோ­னீ­சியா, இந்­தியா, ஈரான் நாடு­களில் ஏழு நாள் தொற்றின் சரா­சரி அளவு, உலகம் முழு­வ­தும் ஒவ்­வொருநாளும் ஏற்­படக்­கூ­டிய புதிய தொற்­றில் ஏறத்­தாழ 38% ஆக இருக்­கிறது.

டெல்டா உரு­மா­றிய கிருமி முதன்­மு­த­லாக இந்­தி­யா­வில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. அந்­தக் கிருமி அதி­வே­க­மா­கப் பர­வக்­கூ­டிய ஆற்­றல் உடை­யது. உல­கில் கிருமி தொற்­றி­யோ­ரில் ஏழு பேரில் ஒரு­வர் அமெ­ரிக்­கா­வைச் சேர்ந்தவர். கடு­மை­யாக பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் ஏறத்­தாழ 97 விழுக்­காட்­டி­னர் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர்­கள் என வெள்ளை மாளிகை கொவிட்-19­ குழு கூறுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!