4,900க்கும் மேற்பட்ட புதிய பிடிஓ வீடுகள்

4,900க்கும் மேற்பட்ட புதிய பிடிஓ வீடுகள்

2 mins read

சிங்­கப்­பூ­ரின் ஐந்து குடி­யி­ருப்பு வட்­டா­ரங்­களில் ஏழு வீட­மைப்­புத் திட்­டங்­க­ளின்­கீழ் வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கத்­தின் (வீவக) 4,989 புதிய 'பிடிஓ' (தேவைக்­கேற்­பக் கட்­டித்­தரப்­படும்) வீடு­கள் விற்­ப­னைக்கு வந்­துள்­ளன. கிட்­டத்­தட்ட பத்­தாண்­டு­க­ளுக்­குப் பிறகு முதல்­மு­றை­யாக குவீன்ஸ்­ட­வுன், ஜூரோங் ஈஸ்ட் வட்­டா­ரங்­க­ளி­லும் இப்­பு­திய பிடிஓ வீடு­கள் அமைந்­துள்­ளன.

முதிர்ச்­சி­ய­டைந்த குடி­யி­ருப்பு வட்­டா­ரங்­களில் ஆகப் பழை­மை­யான வட்­டா­ர­மான குவின்ஸ்­ட­வுனில் ஒன்­பது ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு 'குவீன்'ஸ் ஆர்க்' வீட­மைப்­புத் திட்­டத்­தின்­கீழ் இரு புளோக்கு­களில் மொத்­தம் 610 மூவறை, நான்­கறை வீடு­கள் விற்­ப­னைக்கு வந்­துள்­ளன.

வீடு­க­ளின் விலை மானி­ய­மின்றி மூவறை வீட்­டுக்கு $382,000 முதல் நான்­கறை வீட்­டுக்கு $540,000 வரை இருக்­கும். இவ்­வீ­டு­கள் தயா­ரா­வ­தற்கு வீட்டு உரி­மை­யா­ளர்­கள் ஐந்து ஆண்­டு­க­ளுக்கு மேல் காத்­தி­ருக்­கக்­கூ­டும் என்று கூறப்­ப­டு­கிறது.

முதிர்ச்­சி­ய­டையா வட்­டா­ர­மான ஜூரோங் ஈஸ்ட்­டி­லும் பத்­தாண்­டு­க­ளுக்­குப் பிறகு புதிய பிடிஓ வீடு­கள் அமைந்­துள்­ளன. இவ்­வட்­டா­ரத்­தில் ஈரறை, மூவறை, நான்­கறை வீடு­கள் என மொத்­தம் 569 வீடு­கள் விற்­ப­னைக்கு வந்­துள்­ளன. மூவறை வீட்­டுக்கு $237,000 எனத் தொடங்கி நான்­கறை வீட்­டுக்கு $347,000 வரை வீடு­க­ளின் விலை இருக்­கும்.

இவற்­றைத் தவிர தெம்­ப­னிஸ், ஹவ்­காங் வட்­டா­ரங்­களில் தலா இரண்டு பிடிஓ திட்­டங்­கள், காலாங்/வாம்போ வட்­டா­ரத்­தில் ஒரு திட்­டம் எனப் புதிய பிடிஓ வீடு­கள் விற்­ப­னைக்கு வந்­துள்­ளன. காலாங்/வாம்போ வீட­மைப்­புத் திட்­டத்­தில் வாடகை வீடு­கள் கொண்ட ஒரு புளோக்­கும் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

விண்­ணப்­பிக்க இறுதி நாள் இம்­மா­தம் 17ஆம் தேதி என்று தெரி­விக்­கப்­பட்­டது. குலுக்­கல் முறை­யில் வீடு­கள் வழங்­கப்­படும்.

இதற்­கி­டையே, கொவிட்-19 நெருக்­க­டி­யால் கட்­டு­மா­னத்­து­றைக்­குப் பலத்த பாதிப்பு என்­றும் அத­னால் பல பிடிஓ திட்­டங்­கள் தடைப்­பட்­டன என்­றும் தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ நேற்று ஃபேஸ்புக்­கில் பதி­விட்­டார்.

மேலும் செய்தி - பக்­கம் 2ல்