தடுப்பூசி போட்டுக்கொண்ட பக்தர்கள் தீமிதித் திருவிழாவில் பங்கேற்கலாம்

தடுப்பூசி போட்டுக்கொண்ட பக்தர்கள் தீமிதித் திருவிழாவில் பங்கேற்கலாம்

2 mins read

தீமி­தித் திரு­விழா இவ்­வாண்டு அக்­டோ­பர் 24ஆம் தேதி­யன்று நடை­பெ­று­கிறது. முழு­மை­யா­கத் தடுப்­பூ­சி போடப்­பட்டு இரண்டு வாரங்­கள் கடந்­துவிட்ட பக்­தர்­கள் மட்­டுமே அன்று கோவி­லுக்­குள் அனு­ம­திக்­கப்­ப­டு­வர். அல்­லது அதற்கு முன்­ன­தாக அவர்­கள் கொவிட்-19 பரி­சோ­த­னையை மேற்­கொண்­டி­ருக்­க ­வேண்­டும்.

பக்­தர்­கள் தீமி­தி­யில் கலந்­து­கொள்ள இணை­யம் வழி அடுத்த மாதம் விண்­ணப்­பிக்­க­லாம். மேலும், பெரு­மாள் கோவி­லி­லி­ருந்து மாரி­யம்­மன் கோவி­லுக்­கான ஊர்­வ­லம் நடை­பெ­றாது. பக்­தர்­கள் நேர­டி­யாக மாரி­யம்­மன் கோவி­லுக்கு வர­வேண்­டும்.

தீமி­திக்கு முன்­பும் பின்­பும் நடை­பெ­றும் பால்­கு­டம், அங்க பிர­தட்­ச­ணம் போன்ற சடங்­கு­கள் நடை­பெ­றும். இந்­தச் சடங்­கு­களில் ஒரு சம­யத்­தில் 50 பேர் மட்­டுமே கலந்­து­கொள்ள அனு­ம­திக்­கப்­ப­டு­வர். இவர்­கள் தடுப்­பூசி போட்­டுக் கொண்­ட­வர்­க­ளாக இருக்­க­வேண்­டும் என்ற கட்­டா­யம் இல்லை. எத்­தனை பேர் கலந்­து­கொள்­ள­லாம், குறிப்­பாக என்­னென்ன நடை­பெ­ற­லாம் போன்ற விவ­ரங்­களை அர­சாங்­கத்­து­டன் கலந்­து­ரை­யா­டிய பின் தக­வல் தெரி­விக்­கப்­படும். தேர் ஊர்­வ­லம் இருப்­ப­தும் உறுதி செய்­யப்­ப­ட­வில்லை. ஊர்வலம் இருந்­தா­லும், தேர் நிற்­கா­மல் ஓர் இடத்­தி­லி­ருந்து இன்­னோர் இடத்­திற்­குச் செல்­வ­தா­கத்­தான் இருக்­கும்.

தீமிதி நாளன்று கோவி­லுக்­குள் 50க்கும் மேற்­பட்ட பக்­தர்­கள் அனு­ம­திக்­கப்­ப­ட­லாம் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இது குறித்த மேல்­வி­வ­ரங்­கள் கூடிய விரை­வில் வெளி­யி­டப்­படும்.

இந்த ஆண்­டின் தீமி­தித் திரு­விழா சென்ற ஆண்­டை­விட அதி­க­மான பக்­தர்­க­ளு­டன் சிறப்­பாக நடை­பெ­ற­வி­ருந்­தா­லும் கிரு­மித்­தொற்­றுக்கு முன்பு நடை­பெற்ற தீமி­தித் திரு­வி­ழாக்­கள் போல் இருக்­காது. சமூக இடை­வெ­ளி­யைக் கடைப்­பி­டித்து, விதிக்­கப்­பட்­டுள்ள கட்­டுப்­பா­டு­க­ளு­டன் பாது­காப்­பான முறை­யில் தீமிதி நடை­பெ­றும்.

தீமி­தியை வீட்­டி­லி­ருந்தே பார்க்க விரும்­பு­ப­வர்­க­ளுக்கு அந்­நி­கழ்வு இணை­யம் வழி நேரடி ஒளி­ப­ரப்பு செய்­யப்­படும்.

செய்தி: இந்து இளங்­கோ­வன்