தொடர்பு தடங்களை அறியும் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

தொடர்பு தடங்களை அறியும் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

1 mins read
d17aec65-01bd-4f18-8152-a1769630be0f
-
Google News Preferred Icon

கொவிட்-19 கிருமித்தொற்று ஆளாகும் சாத்தியம் உள்ளோரைக் கண்டுபிடிப்பதற்கு தொடர்புத் தடங்களை அறியும் பணியை மேற்கொண்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஜூலையின் மத்திய பகுதியிலிருந்து இந்த எண்ணிக்கை 50 விழுக்காடு அதிகரித்திருப்பதாக சுகாதார அமைச்சு, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பத்திரிகையிடம் தெரிவித்தது.

இந்தப் பணியில் இருப்போரின் எண்ணிக்கை 330லிருந்து 480க்கு அதிகரித்துள்ளது. கேடிவி கேளிக்கைக்கூடங்களில் கிருமித்தொற்றுக் குழுமம் உருவானதை அடுத்து சிங்கப்பூரில் கிருமித்தொற்றுகள் அதிகரித்துள்ளன. இதனைத் தொடர்ந்து சமூகத் தொற்றுகளின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்தது.

இந்தப் பரவல் நடந்துகொண்டிருந்தபோது தேவைப்படுவோருக்கு தனிமை உத்தரவு வழங்குவதில் சற்று தாமதம் ஏற்பட்டிருந்ததாக கூறப்பட்டது.

ஜூலையின் பிற்பகுதியிலும் ஆகஸ்ட் மாத முற்பகுதியிலும் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.