அடையாளம் காணும் பணி தீவிரம்

2 mins read

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிப்­ப­டைந்­தோ­ரு­டன் நெருங்­கிய தொடர்­பில் இருந்­தோரை அடை­யா­ளம் காணும் பணி­கள் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

இதனை முன்­னிட்டு, பாதிக்­கப்­பட்­டோ­ரு­டன் யாரெல்­லாம் இருந்­தார்­கள் என்­பதை அலசி ஆராய்ந்து, அவர்­களை அடை­யா­ளம் காண்­போ­ரின் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. கடந்த ஜூலை மாதம் நடுப்­ப­கு­தி­யி­லி­ருந்து இவர்­

க­ளின் எண்­ணிக்கை ஏறத்­தாழ 50 விழுக்­காடு ஏற்­றம் கண்டு இருப்­ப­தாக சுகா­தார அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் நோய்­வாய்ப்­பட்­டி­ருப்­போ­ரின் எண்­ணிக்கை அண்­மை­யில் கூடி­யி­ருப்­ப­தால், பாதிக்­கப்­பட்­டோ­ரு­டன் நெருங்­கிய தொடர்­பில் இருந்­த­வர்­களை அடை­

யா­ளம் காண்­போ­ரின் எண்­ணிக்கை 330லிருந்து 480ஆக அதி­க­ரிக்கப்பட்டுள்ளது.

பாதிக்­கப்­பட்­டோரின் எண்­ணிக்கை குறை­வாக இருந்­த­போது அவர்களு­டன் நெருங்­கிய தொடர்­பில் இருந்­தோரை அடை­யா­ளம் கண்டு, அவர்­க­ளைத் தனி­மைப்­ப­டுத்த 14 நாட்­கள் தேவைப்­பட்­ட­தாக சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் கூறி­னார். அடை­யா­ளம் காணும் குழு­வில் பல்­வேறு அமைச்­சு­க­ளைச் சேர்ந்த அதி­கா­ரி­களும் சுகா­தார அமைச்­சின் ஆணை பெற்ற கழ­கங்­கள் மற்­றும் பொதுச் சேவை­யைச் சேர்ந்த தொண்­டூ­ழி­யர்­களும் இடம்­பெற்­றுள்­ள­னர்.

இந்­தப் பணிக்­காக மற்ற சேவை நிறு­வ­னங்­க­ளி­லி­ருந்து ஊழி­யர்­கள் சேர்க்­கப்­ப­டு­கின்­ற­னர்.

இதற்­கி­டையே, கொவிட்-19 நோயா­ளி­க­ளுக்­காக நாடெங்­கும் உள்ள தீவிர சிகிச்­சைப் பிரி­வு­களில் ஏறத்­தாழ 100 படுக்­கை­கள் ஒதுக்­கப்­பட்­டுள்­ள­தாக சுகா­தார அமைச்சு நேற்று கூறி­யது.

"கொவிட்-19 பாதிப்பு ஒரு­வேளை அதி­க­ரித்­தால் நமது தீவி­ர சிகிச்­சைப் பிரிவு

வச­தி­களை விரி­வுப­டுத்த தயா­ராக இருக்­கி­றோம்," என்று அமைச்சு தெரி­வித்­தது.

கொவிட்-19 நோயா­ளி­க­ளைப் பரா­ம­ரிக்க அவர்­க­ளுக்­குத் தேவை­யான மருத்­துவ வச­தி­களைப் படிப்­ப­டி­யாக விரி­வு

ப­டுத்த பொது மருத்­து­வ­ம­னை­

க­ளு­டன் இணைந்து செயல்­

ப­டு­வ­தாக அது கூறி­யது.

பொது படுக்கைப் பிரிவுகளை தீவிர சிகிச்­சைப் பிரி­வு­க­ளா­கவோ

அல்­லது தனி­மைப்­ப­டுத்­தும் அறை­க­ளா­கவோ விரை­வாக மாற்­றி­ய­மைக்க தேவை­யான ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டுள்­ள­தாக அமைச்சு தெரி­வித்­தது. அது­மட்­டு­மல்­லாது, செயற்கை

சுவா­சக் கருவிகள், மருந்­து­கள் ஆகி­யவை போது­மான அள­வில் இருப்­பதை உறுதி செய்­துள்­ள­தாக அது கூறி­யது.

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 கடந்த ஆண்­டில் முதல்­மு­றை­யாக தலை­தூக்­கி­ய­போது இருப்பில் இருந்த தனி­மைப்

­ப­டுத்­தும் அறை­க­ளை­விட தற்­போது மூன்று மடங்கு அதிக அறை­கள் இருப்­ப­தாக தேசிய தொற்­று­நோய் எதிர்ப்பு நிலை­யத்­தின் நிர்­வாக இயக்­கு­நர் பேரா­சிரி­யர் லியோ யூ சின் தெரி­வித்­தார்.

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ருக்­குச் சிகிச்சை வழங்­கு­வ­தில் முழு கவ­னம் செலுத்­தும் வகை­யில் அவ­ச­ர­மற்ற சிகிச்­சை­கள்

ஒத்­தி­வைக்­கப்­ப­டு­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டது. சிங்­கப்­பூ­ரில் உள்ள கொவிட்-19 நோயா­ளி­களில் மூன்­றில் ஒரு­வ­ருக்கு தேசிய தொற்­று­நோய் எதிர்ப்பு நிலை­யம் சிகிச்சை அளித்து வரு­வ­தாக பேரா­சிரி­யர் லியோ கூறி­னார். இலே­சா­கப் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் சமூ­கப் பரா­ம­ரிப்பு வச­தி­களில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக அவர் தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூ­ரில் உள்ள சமூ­கப் பரா­ம­ரிப்பு வச­தி­களில் தற்­போது 5,000க்கும் மேற்­பட்­டோர் தங்­க­லாம் என்­றும் தேவை ஏற்­பட்­டால் கூடு­தல் இடங்­க­ளுக்கு ஏற்­பாடு செய்­யப்­படும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.