இந்தியாவின் கேரள மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 23,500 பேர் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் இரண்டாவது முறையாக கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களும் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரளாவில் புதிய வகை கொவிட்-19 கிருமி பரவி வரும் சாத்தியத்தை நிராகரிக்க முடியாது என்று அம்மாநிலத்தின் சுகாதார அமைச்சு கவலை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மலையாளி
களின் முக்கிய பண்டிகையான ஓணம் நெருங்குகிறது (இம்மாதம் 21ஆம் தேதி).
நிலைமையைக் கருத்தில் கொண்டு ஓணம் உள்ளிட்ட
பண்டிகைகளைப் பொது இடங்களில் கொண்டாடவோ பெருமளவில் கூடவோ கேரள அரசு தடை விதித்துள்ளது.
புதிய பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களில் பரிசோதனை அதிகரிக்கப்படும். சபரிமலை ஐயப்பன் கோவில் யாத்திரை நாளை மறுநாள் தொடங்குகிறது. கூட்ட நெரிசலைத் தவிர்க்க, ஒவ்வொரு நாளும் 15,000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
இன்னும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள இயலாதவர்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க வெளியே செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுக்கடைகளுக்குச் செல்
பவர்களுக்கும் தடுப்பூசி உள்ளிட்ட நிபந்தனைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
முதல்முறை தடுப்பூசி போட்டவர்கள், கிருமித்தொற்று இல்லை என்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டவர்கள். கிருமித்தொற்று ஏற்பட்டு அதிலிருந்து குணமடைந்து ஒரு மாதத்துக்கு மேலானவர்கள் மட்டுமே மதுபானம் வாங்க கடைக்குச் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 நெருக்கடிநிலை மேலும் மோசமடையாமல் இருக்க இந்த கடுமையான கட்டுப்பாடுகள் அவசியம் என்று கேரள அரசு வலியுறுத்தியது.

