மலேசியத் தலைநகர் கோலாலம்
பூரில் உள்ள கிராண்ட் சீசன்ஸ் ஹோட்டலில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி நிலையத்தில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
வரிசையில் நின்றுகொண்டிருந்த அனைவரும் அருகருகில் நின்று கொண்டிருந்ததைக் காட்டும் காணொளி நேற்று முன்தினம் இணையத்தில் வலம் வந்தது.
சமூக இடைவெளி விதிமுறை கடைப்பிடிக்கப்படாதது குறித்து காணொளியைப் பார்த்த பலர்
அதிருப்தி தெரிவித்தனர்.
மலேசியாவில் கொவிட்-19
கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இது நிகழ்ந்திருப்பது ஏமாற்றம் அளிப்பதாக மலேசியர்கள் பலர் கூறினர். தடுப்பூசி நிலையத்துக்கு வெளியே ஆடவர் ஒருவர் தமது மோட்டார் சைக்கிளை நிறுத்தி சமூக இடை
வெளியைக் கடைப்பிடிக்கும்படி அனைவரிடமும் கத்துவதைக் காணொளி காட்டுகிறது.
கொவிட்-19 விதிமுறைகள் பின்பற்றப்படுவதை அமைச்சர்களும் அதிகாரிகளும் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கண்ணீர் மல்க மன்றாடும் காட்சி பார்ப்பவர் மனதை உருக வைத்தது.

